புட்டீனை கண்டு டிரம்பிற்கு அச்சம் வந்தாயிற்று

பிரிட்டனில் அடித்து ஆடும் புட்டீனை கண்டு டிரம்பிற்கு அச்சம் வந்தாயிற்று, இவர் பிரிட்டனையே இந்தபாடு படுத்தும்பொழுது அமெரிக்காவினை விடுவாரா? என அஞ்சிய டிரம்ப் 60 ரஷ்ய தூதரக அதிகாரிகளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்

ஐரோப்பிய நாடுகளெங்கும் ரஷ்ய தூதரகங்கள் கண்காணிக்கபடுகின்றன‌

இதனை யூகித்த ரஷ்யா மாபெரும் ராணுவ பயிற்சி ஒன்றை தன் மேற்கு எல்லையில் நடத்தி இருக்கின்றது

சோவியத் காலத்திற்கு பின்பான மிகபெரும் பயிற்சி இது, நவீன ஆயுத சகிதம் மிரட்டியிருக்கின்றது

புட்டீன் சொல்லவருவது என்னவென்றால் “எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார், முடிந்தால் மோதி பாருங்கள்”

மறுபடியும் உலகில் தன் இரும்பு கரங்களால் மிரட்ட தொடங்கிவிட்டது ரஷ்யா