புத்திரபாசம் ஒருவகை பலவீனம்

ஒன்றின் தொடக்கமல்ல அதன் முடிவே கவனிக்கதக்கது என்பது யூத பழமொழி

தமிழகத்தில் எல்லோரும் வரும்பொழுது நல்ல தலைவர்களாக கொள்கையாளர்களாகத்தான் வருகின்றார்கள்

ஆனால் கொள்கைக்காக வாழ்ந்து கொள்கையாளர்களாக சாதித்து நிலைத்து முடிந்தவர்கள் யாருமே இல்லை

தமிழக சாபம் அது

அந்த சாபத்துக்கு டாக்டர் ராமதாஸும் தப்பவில்லை

அவரின் தொடக்கம் அருமையாக இருந்தது, முடிவு மகா குழப்பமும் சர்ச்சையுமானது

எனினும் தமிழக அரசியலில் திமுக அதிமுகவுக்கு ஒரு காலத்தில் சவால்விட்ட அரசியல்வாதி அவர், சில ஆச்சரியங்களையும் கொடுத்தவர்

அரசியல் எந்த உத்தமனையும் திசைதிருப்பிவிடும் என்பதற்கும், நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை வந்தாலும் நல்லவர்களாக இருப்பதில்லை என்பதற்கும் எடுத்துகாட்டாய் விளங்கும் ராமதாஸுக்கு இன்று பிறந்தநாள்

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்த தசரதன், துரோணர், ராவணன் இந்த மூவருக்கும் புத்திரபாசம் அதிகம் அதனால் தடம்மாறி சென்றார்கள் என்கின்றது புராணம்

புத்திரபாசம் ஒருவகை பலவீனம் என்பார்கள்

அந்த சாபம் கலைஞருக்கு தேவகவுடாவுக்கு இன்னும் பலருக்கு தொடர்ந்தது, ராமதாஸும் அதில் சிக்கிவிட்டது மகா சோகம்