புரபல்லா குமார் மகந்தா

அசாம் மாநிலத்தில் ஒரு இஸ்லாமியர் மாட்டுகறிக்கு தாக்கபட்டதாகவும் பன்றிகறி உண்ணுமாறு கொடுமைபடுத்தபட்டதாகவும் பல காட்சிகள் வருகின்றன‌

அசாமில் சிக்கல் ஏராளம், ஒரு காலத்தில் புரட்சி எல்லாம் வெடித்தது

மாணவர் புரட்சி வெடித்து அதில் ஒரு தலைவரும் நாட்டுக்கு வந்தார், அவர் பெயர் புரபல்லா குமார் மகந்தா

ஆம், இந்தியாவில் 28 வயதில் முதல்வரான முதல் நபர் அவர்தான், இன்றுவரை இளம்வயதில் முதல்வரானது அவர்தான்

நாடே அவரை திரும்பி பார்த்தது, மாபெரும் புரட்சி அசாமில் நடந்ததாக உலகம் சொன்னது

மிக துடிப்பான அவரால் அசாமினை மாற்றமுடிந்ததா என்றால் இல்லை, மத்திய அரசை எதிர்த்துவிட்டு ஒரு மாநிலத்தை உருப்படவைக்க முடியாது என்பது அவருக்கு தெரிந்தது

கூடவே அந்நிய சக்திகள் தேசத்தை எப்படி எல்லாம் கூறுபோடும் என்பதையும் கண்டார்

அரசியலில் அதன் பின் திணறினார், மாநில நலனா நாட்டு பாதுகாப்பா என அவர் குழம்பி உல்பாவுக்கு எதிரான நடவடிக்கையில் சைக்கியா கமிஷனால் சிக்கலுக்குள்ளானார்

தேசிய கட்சிகளை எதிர்த்து ஒரு மாநில கட்சி நிலைக்க முடியுமா என்பதில் ஏற்றமும் தாழ்வுமாக அவரின் போராட்டம் நீடிக்கின்றது

ஒரு நல்ல இந்தியன் மாநில நலனை காத்து இந்தியனாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு என்றுமே மகந்தா எடுத்துகாட்டு

இந்த சந்திரபாபு நாய்டு, மம்தா, மாயாவதி,தேவகவுடா அவ்வப்போது ஸ்டாலின் என சிலர் செய்யும் தேசிய அரசியல் மோசடி இம்சைக்குள் அவர் வரமாட்டார், வித்தியாசமானவர் அவர்

இத்தனைக்கும் தனி சிறப்பு பெற்ற அரசியல்வாதி

இப்பொழுது பாஜக ஆட்சி நடக்கும் அசாமில் இந்த இஸ்லாமியர் கொடுமை படுத்தபட்டதாக செய்தி வருகின்றது

வழக்கம் போல இது அசாம் பிரிவினைவாதிகள் செயல் என்கின்றன பாஜக கோஷ்டிகள், மகந்தா கனத்த அமைதி

அந்த அமைதிதான் உண்மையிலே இது அந்நிய சக்தி விளையாட்டா? என யோசிக்க வைக்கின்றது

அந்த மாபெரும் அசாம் புரட்சியினை தாண்டி அம்மாநிலம் மகந்தாவின் கைகளை விட்டு சென்றதென்றால் அங்கு வேறு ஏதோ சிக்கல் இருகின்றதல்லவா?

இந்தியாவில் மாநில கட்சிகள் நிறைய உண்டு, அவைகள் தேசிய கட்சியிடம் வெற்றியும் தோல்வியும் பெறும்

ஒரு மாநில கட்சியாக தேசிய கட்சிக்கு பெரும் தோல்வி கொடுத்தது திமுக‌

ஆம் ராமசந்திரன் மட்டும் விலகாமல் இருந்தால் ஜோதிபாசுவின் சாதனையினினை கலைஞரால் முறியடித்திருக்க முடியும்

28 வயதில் மாபெரும் புரட்சியாளனாக களத்திற்கு வந்த மகந்தாவுக்கும் கலைஞருக்கும் என்ன வித்தியாசமென்றால்

கலைஞருக்கு நீதிகட்சி, பெரியார், அண்ணா என பல வேர்கள் இருந்தன, ஆனால் மகந்தா ஒரு சுயம்பு

ஏன் கலைஞர் நிலைத்தார் மகந்தா தடுமாறினார் என்றால்

கலைஞர் நெளிவு சுளிவுகளோடு கட்சி நடத்தினார் காலமும் விதியும் அவருக்கு ஒத்துழைத்தது

மகந்தா அப்படி அல்ல அவருக்கு பல விஷயம் சாதகமில்லை

அரசியலில் அதிர்ஷ்டமும் வேண்டும் கலைஞருக்கு அது நிறைய இருந்தது.