புராணத்தில் இருந்ததை வரைந்தோம் அதிலென்ன தவறு என பகுத்தறிவு கோஷ்டி மறுபடியும் கிளம்பிற்று

புராணத்தில் இருந்ததை வரைந்தோம் அதிலென்ன தவறு என பகுத்தறிவு கோஷ்டி மறுபடியும் கிளம்பிற்று, அறிவுகெட்ட அக்கோஷ்டியினை நினைத்தால் பரிதாபமே மிஞ்சும்

இவர்களை அவர் தாய்தந்தையர் பெற்றெடுத்த சம்பவங்களை வரைய தயாரா? இவ்வளவுக்கும் நடந்த சம்பவங்கள் அவை

பெரியாரும் மணியம்மையும் தேனிலவுக்கு சென்றதை வரைய தயாரா?

வரைந்தால் பொறுத்து கொள்வார்களா?

பைபிள் காட்சிகளை வரையாமல், இன்னும் பல மதங்களின் ரகசிய பக்கங்களை கடந்துவிட்டு இந்துமத புராணங்களை மட்டும்வரைவோம் என்றால் அது கலவரம் ஏற்படுத்தும் நோக்கமன்றி வேறேன்ன?

ராமரை அடித்துவிட்டு ஜெயித்தார்களாம், பெருமையாக சொல்கின்றார்கள்

இதையே மசூதி இடித்துவிட்டு ஜெயித்தோம் என பாஜக சொன்னால் அது அப்பட்டமான மதவாதம் பாசிசம், இவர்கள் சொன்னால் புரட்சி