புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்..

உபர் மற்றும் ஓலா என்பது இன்று இனிக்கலாம், அட சவுக‌ரியமான விலை மற்றும் சேவை என குதிக்கலாம்

எல்லாம் மற்ற சேவைகளை அதாவது வாடகை கார்கள் ஆட்டோக்கள் என எல்லாவற்றையும் ஒழித்துகட்டும் வரைதான்

ஒரு காலத்தில் இவற்றால் மற்ற வாடகை வாகனங்கள் பாதிக்கபட்டு ஒரு கட்டத்தில் நின்றே விடும்

அதன் பின் உபரும் ஓலாவும் ஏகபோக நிறுவணங்களாகிவிடும், அவர்கள் வைத்ததே வேதமாகிவிடும்

அவர்கள் வைத்ததுதான் கட்டணம் என அள்ளி குவிப்பார்கள், நம்மை கசக்கி பிழிவார்கள்

பல நாடுகள் இச்சிக்கலை புரிந்து கொண்டு இவைகளை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டன‌

இந்தியா போன்ற மாபெரும் நாட்டில் இவைகள் மற்ற போக்குவரத்தினை ஒழித்துவிட்டு ஏக போகத்தை நிலைநாட்டலாம்

இவற்றால் அழியபோகும் தொழிலாளர் ஏராளம்

இதைத்தான் இன்றே கோடிட்டு காட்டிவிட்டார் நிர்மலா சீத்தாராமன்

புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்..

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்” என இதைத்தான் சொன்னான் வள்ளுவன்

(அடேய் சங்கிஸ் டேக் த 500 ருப்பீஸ்)