புருஷா கமிஷன்
இந்த புருஷா கமிஷன் எந்த கட்சியின் ஆட்சி அமைக்குமோ அக்கட்சி ரஷ்ய புட்டீன் போல, சீனாவின் ஜின்பெங் போல நிரந்தர ஆட்சியில் அமரும்
ஏன் மு.க ஸ்டாலினே அந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பார்
ஆனால் நம் துரதிருஷ்டம் பாருங்கள் இந்த மோடி என்பவருக்கும் மனைவி கொடுக்கும் கஷ்டம் என்னவென்றே தெரியாது
இந்த ராகுல்காந்தி என்பவருக்கும் சுத்தமாக தெரிய வாய்ப்பே இல்லை
ஒன்று காவி சன்னியாசி இன்னொன்று வெள்ளை சன்னியாசி
இந்த இருவரையும் வைத்துகொண்டு புருஷன்கள் இந்தியாவில் யாரிடம் புலம்ப முடியும்?
இவர்கள் இருவருக்குமே புருஷன் கஷ்டம் என்னவென்றே தெரியாததால் புருஷா கமிஷன் இப்போதைக்கு அமைய வாய்ப்பே இல்லை
நம் துரதிருஷ்டம் அப்படி…
கலைஞர் மட்டும் இருந்திருந்தால் மாநில அளவிலாவது புருஷா கமிஷன் நிச்சயம் அமைந்திருக்கும்,
அவருக்கு தெரியாத புருஷன் கஷ்டமா?
(அவரும் சும்மா அல்ல , “தசரதன் துயரம்” “பாண்டவர் வலி” என அதனை வைத்து இந்துக்களை சீண்டிவிட்டுத்தான் கமிஷன் பக்கம் வருவார்)
இப்பொழுது அவரும் இல்லை என்பதுதான் மாபெரும் சோகம், துண்டை எடுத்து வாயில் பொத்தி அழவேண்டியதுதான்
வேறு என்ன செய்யமுடியும்?
