புலிகளை அசிங்கபடுத்தும் திருப்பணியினை தொடங்கிவிட்டார் சைமன்
பழைய கதைகளை எல்லாம் தோண்டி புலிகளை அசிங்கபடுத்தும் திருப்பணியினை தொடங்கிவிட்டார் சைமன்
உண்மையில் புலிகளின் தலமை சாப்பாட்டு பிரியர்கள், சென்னையில் இருந்தபொழுது அய்யர் வேடத்தில் மிலிட்டரி ஹோட்டலில் வெளுத்துவாங்கிய கிட்டு தன்னை ஈழ பிராமணன் என செய்த சாப்பாட்டு காமெடியும் உண்டு
பிரபாகரனுக்கு தெரிந்த விஷயங்களில் அல்லது தெரிந்த ஒரே விஷயம் சமையலும் உண்பதும் என்பது அவரோடு பழகியவர்களில் பலர் சொல்வது
சந்திரிகா 1995ல் யாழ்பாணத்தில் இருந்து புலிகளை விரட்டியபொழுது புலிகளுக்கு உணவு தட்டுப்பாடு வந்தது, அப்பொழுது புலிகளின் ஆயுத கப்பல் ஒன்று பிடிபட்டது அது தாய்லாந்தில் இருந்து வந்தது
மிக பெரும் ராக்கெட் லாஞ்சரும் கண்ணிவெடியும் துப்பாக்கியும் இருக்கும் என சோதித்த சிங்கள படை ஆச்சரியத்தில் மூழ்கியது
காரணம் அங்கு இருந்தது உடும்பு கறி, பெட்டி பெட்டியாக இருந்தது
ஆம் இங்கு தின்றது போதாமல் கப்பல் கப்பலாக உடும்பு கறி தின்ற கூட்டம் அது
அந்த போராட்டத்தை முனியாண்டி விலாஸ் அளவுக்கு தின்று தீர்த்தார்கள் என்பது அப்பொழுதே இருந்த ஒரு விவாதம்
அதை மறுபடியும் கிளறி புலிகள் இயக்கம் சாப்பாட்டு மடம், தின்று கெட்டவர்கள் கூடாரம் என நிரூபிக்க படாதபாடு படுகின்றார் சைமன்