புளோட்டிங் ஸ்டோன்..
இலங்கையில் மிதக்கும் கல் கண்டுபிடிப்பு, மிதக்கும் கல்லை காண மக்கள் கூட்டம் செய்தி
ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு, இல்லை அதைவிட முன்பாக ஒரு காட்சி உண்டு
நளன் என்றொரு வானரம் அப்பொழுது இருந்ததாம், பயங்கரமான சேட்டை ரகம். ஒரு ஞானி குளிக்கும் பொழுது கல்லை தூக்கி எறிவதும் அவர் விரட்டினால் ஓடுவதும் மறிபடியும் கல் எறிவதுமாக அழிச்சாட்டியம்
அவர் என்ன நீதிமன்றத்துக்கா செல்லமுடியும் இதனால் தன் வழக்கமான சாபங்களில் ஒன்றை கொடுத்தார், “இனி நீ எறியும் கல் எல்லாம் மிதக்க கடவது”
அந்த நளன் அதன் பின் எறிந்த கல் எல்லாம் மிதந்தது, இரும்பு, வெண்கலத்தை தூக்கி எறிந்திருக்கலாம் ஆனால் அதற்கு ஏது பகுத்தறிவு?
அதற்கு அப்பொழுது பகுத்தறிவினை போதிக்க இயக்கங்கள் இல்லை
அப்படிபட்ட நளன் ராமருடன் சுக்ரீவன் அனுமன் போன்றோர் செல்லும்பொழுது கூட சென்றது, இலங்கைக்கு ராமர் பாலம் கட்ட சிரமபட்டார், ஆம் குறுகளை இணைத்து அவர் பாலம் கட்ட முயன்றபொழுது ஒன்றும் முடியவில்லை
கடலரசனும் இது என் இயல்பு என சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டு ஓடிவிட்டான்
அங்கே வந்தது நளன், அட இவ்வளவுதானா விஷயம் என சொல்லி தன் கையால் கற்களை தூக்கி எறிந்து பாலம் அமைத்தது, ராமரின் சேனை அப்படியே அதில் நடந்து தலைமன்னாரை அடைந்தது
இப்படித்தான் ராமர்பாலம் கதையினை சொல்கின்றார் வால்மிகி
ஆக ராமாயணத்தில் மிதக்கும் கல் இருந்தது தெரிகின்றது
இதோ இலங்கையில் கல் மிதக்கின்றது என்கின்றார்கள்
நளன் எறிந்த கல்லில் ஒன்று தொலைவில் விழுந்திருக்கலாமோ?
என்னமோ, நாம் செய்தியினை சொல்லிவிட்டோம் இனி மோடி ஆட்சியில் ராமராட்சி திரும்பிவிட்டது ராமாயண கல் கூட கிடைக்கின்றது என உற்சாகத்துடன் கிளம்பிவிடுவார்கள்
ஆம் அதேதான் அந்த கோஷத்துடனே தான்
ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஹனுமான்…ஜெய் புளோட்டிங் ஸ்டோன்..
