பெண் விடுதலை கொள்கை

1984ம் ஆண்டு மத்திய காலங்களில் ஈழமாணவிகள் சிலர் உண்ணாவிரதம் இருந்தனர், தங்களை வேறு பல்கலைகழகத்துக்கு மாற்ற கூடாது என யாழ்பாணத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்

பின்னாளில் திலீபனை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்த புலிகள் இப்பெண்களை அனுமதிக்கவில்லை, உண்ணாவிரதம் எல்லாம் வெற்றுபிம்பம் என அப்பெண்களை மிரட்டி அழைத்து சென்றனர்

அதாவது யார் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் எங்கே எப்படி இருக்கவேண்டும் என்பதை புலிகளே தீர்மானித்தனர், இப்பெண்கள் இருந்தால் தவறு, திலீபன் இருந்து செத்தால் அது தியாகம்

சரி இப்பெண்களை மிரட்டி அவரவர் வீட்டுக்கு அனுப்பினார்களா என்றால் இல்லை, தங்களோடே கொண்டு சென்றனர்

ஏன் அப்படி என்றால் அதுதான் கிட்டுவின் தியாக வரலாறு, பெண் விடுதலை கொள்கை

அதில் ஒரு பெண்ணுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்தது அதை தொடர்ந்து மன்மதன் அம்புகளை எய்ய, காரியம் முடிந்தது

அதன் பின்புதான் யோசித்தான் பிரபாகரன் அவனுக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது

அவனும் உமாமகேஸ்வரனும் ஒன்றாய் இருந்து இயக்கம் நடத்தியபொழுது ஊர்மிளா தேவிக்கும் உமா மகேஸ்வரனுக்கும் காதல் வந்தது, ஊர்மிளா அவர்கள் ஆபீசில் டைப் அடிக்கும் பெண்

இதெல்லாம் இயக்கத்துக்கு ஆகாது, காதல் , கல்யாணம் எல்லாம் தமீழம் அமைவதை தடுக்கும் என்றான் பிரபாகரன். முதலில் ஊர்மிளா அதன் பின் தமிழீழம் என்றார் உமா மகேஸ்வரன்

இந்த சண்டை பெரிதாகி இயக்கமே வெடித்து பிரபாகரன் வெளியேறினான், பாண்டி பஜாரில் இருவரும் சுட தெரியாமல் சுட்டதெல்லாம் இந்த விவகாரமே

இந்நிலையில் நாம் திருமணம் செய்தால் உமா மகேஸ்வரன் சிரிப்பானே, அவனை கொன்றுவிடவும் முடியவில்லையே என தவித்துகொண்டிருந்தான் பிரபாகரன்

மதிவதனிக்கோ சிக்கல் காரணம் வாரிசு உருவாயிற்று

பிரபாகரன் அவளை திருமணம் செய்ய தயாரில்லை அவன் அவளை கொன்றாலும் கேட்பாரில்லை

இந்நிலையில்தான் பாலசிங்கம் ஆலோசனை சொல்லி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார், பால்சிங்கம் ராஜதந்திரி மட்டுமல்ல சிறந்த மணமக்கள் நிலையமும் நடத்தியிருக்கின்றார்

பிரபாகரனின் திருமணம் அக்டோபர் 1 , 1984ல் சென்னை போரூர் முருகன் கோவிலில் நடந்தது, மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி ஏப்ரல் 18, 1985ல் பிறந்தான்

ஆம் திருமணமாகி 6 மாதத்தில் பிறந்தான் சார்லஸ் அண்டனி , அதற்கு 3 மாதங்களுக்கு முன்பே இளமைஎனும் பூங்காற்று பாடலை பாடியிருந்தான் பிரபாகரன், ஆனால் தப்பி ஓடமுடியாதபடி மதிவதனி பிடிவாதம் காட்டியதாலும், அன்று சென்னையில் இருந்ததால் மதிவதனியினை ஒன்றும் செய்யமுடியாத நிலையிலும் ராமசந்திரன் போன்ற பிம்பங்கள் இருந்ததாலும் வேறு வழியின்றி மதிவதனியினை திருமணம் செய்தான் பிரபாகரன்

ஆனால் இதில் அவரின் தம்பி சீமான் கெட்டிக்காரர் விஜயலட்சுமி உட்பட பல பெண்களிடம் அனாசயமாக தப்பி வந்தவர் அவர்