பெரியார் இந்துமதத்தில் ரிவர்ஸ் ஸ்விங்க் வீசியிருக்கலாம்
ஆமாம், அந்த பெரியார் இந்துமதத்தில் ரிவர்ஸ் ஸ்விங்க் வீசியிருக்கலாம்
அதாவது எதிர்ப்பது போல் எதிர்த்து ஒரு விஷயத்தை வெற்றிகரமாக நடத்துவது
குறிப்பாக குழந்தையிடம் “ஓடாதே..” என்றால் ஓடும், “அழாதே.. என்றால் அழும், சிரிக்காதே என்றால் சிரிக்கும்
பொதுவான மன தத்துவம் இது, ஒரு விஷயத்தை செய்யாதே என்றால் செய்ய மனம் துடிக்கும்
இந்த தத்துவத்தை இந்துமதத்தை வளர்க்க பயன்படுத்தியிருக்கின்றார் பெரியார், ஆம் அவரின் செயல் ஒவ்வொன்றும் அப்படித்தான் இருக்கின்றன
அசமந்தமாய் இருந்த இந்துக்களிடம் சிந்திக்க சொல்லியிருக்கின்றார், ஆலயத்தில் நுழை என் சொல்லி அழைத்து சென்றிருக்கின்றார், சிவனில் பாதி சக்தி என்பதை பெண்ணுரிமையாய் சொல்லியிருக்கின்றார்
பிள்ளையார் போல குளிக்காமலும் இருந்திருகின்றார், அவருக்கும் பிள்ளையாருக்கும் ஏகபட்ட தொடர்புகள் உண்டு
அவர் நினைத்தால் பெரும் தமிழ் சமூகத்தை புத்தமதம், கம்யூனிசம், கிறிஸ்தவம், இஸ்லாம் என திசை திருப்பியிருக்கலாம் ஆனால் செய்யவில்லை
எல்லோரும் இந்துமதத்தின் தத்துவத்தை அறியும் பொருட்டு அதை பற்றியே சிந்திக்க சொல்லியிருக்கின்றார், மூட நம்பிக்கையினை சிந்திக்க வைத்து அதன் உண்மை பொருளை உணர வைத்திருகின்றார்
அதுவரை சும்மா இருந்த தமிழ்சமூகம் அவரால் சிந்தித்து இந்துமத அருமை பெருமைகளை உணர்ந்து அதை காக்க கிளம்பிற்று
அவரால் அறிவு பெற்ற இந்துக்களே இதர மதமாற்றங்களில் இருந்து தங்களையும் தங்கள் மதத்தையும் காத்தது
மதமாற்றமும் இந்து மதத்தின் மேல் பல அதிருப்திகளும் வந்த அந்த நேரம் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை புதுவெள்ளம் பாய்ச்சியது
எல்லா திராவிடர்களும் இந்துமதத்தை பற்றி சிந்திக்க வழிசெய்தார், தாழ்த்தபட்ட மக்களை ஆலயத்தில் விடுவதில்லை என்றால் முதல் ஆளாக ஓடிசென்று அவர்களை ஆலயத்துக்குள் இழுத்த்து சென்றார்
பெரியார் இருக்கும் தைரியத்தில் எல்லா மக்களும் ஆலயத்தில் நுழைய முடிந்தது இல்லாவிடில் அவர்களை அல்லேலூயா கோஷ்டி அள்ளிகொண்டு சென்றிருக்கும்
அவர் நிச்சயம் இந்துமதத்தின் காவல் தெய்வம்..
சில காவல் தெய்வங்கள் கோவிலுக்குள் வராது, ஊருக்குள்ளும் வராது மாறாக ஊருக்கு வெளியே காவல் இருக்கும்
அவற்றின் கையில் ஆயுதமும் வாளும் இருப்பது வருவோரை வெட்டுவது போல் தெரிந்தாலும் அவைதான் உண்மையான காவல் தெய்வங்கள்
பெரியார் என்பவரும் அப்படியே
ஆழ சிந்தித்தால் அம்மனிதன் ஒரு சித்தனாக இருந்திருக்கின்றான், இன்றில்லை என்றாயினும் இன்னொருநாள் அந்த ஞானகிழவனை புரிந்துகொள்வீர்கள்