பெரியார் கோஷ்டிகளுக்கு செருப்படி விழுவதாக செய்திகள் சொல்கின்றது
ஈழத்தில் கால் வைத்திருக்கும் பெரியார் கோஷ்டிகளுக்கு செருப்படி விழுவதாக செய்திகள் சொல்கின்றது
இந்திய ராணுவத்தையெ விரட்டி அடித்த பூமி அது, டெல்லியினை எதிர்த்த நிலையில் தமிழகத்தில் காலூன்ற புலிகளுக்கு திராவிட இயக்கங்களை விட்டால் வேறு தெரிவு இருக்கவில்லை
இன்னொன்று சில அந்நிய சக்திகள் குறித்து கொடுக்கும் புள்ளியில் திராவிட கழகமும் புலிகளும் இந்திய எதிர்ப்பு என சரியாக கைகுலுக்கினார்கள்
மற்றபடி பெரியார், அம்பேத்கர் இன்னபிற இம்சைகள் ஈழத்தில் கால் வைத்துவிட கூடாது என்பதில் யாழ்பாணமும் புலிகளும் இன்னும் பலரும் கடும் விழிப்பாய் இருந்தார்கள்
இப்பொழுது போர் ஓய்ந்துவிட்ட நேரம், புலிகளும் இல்லை
இந்நேரம் பார்த்து ஈழத்தில் கால் ஊன்ற சென்ற கருப்பு சட்டைகளுக்கு செருப்பு அடி விழுகின்றது
ஆம் ஈழதமிழன் கொஞ்சமேனும் மானமும், தன் இனத்தின் மதத்தின் கலாச்சாரத்தின் மேல் கடும்பற்றும் கொண்டவன், அதற்கு ஆபத்துவரும் பொழுது சாகவும் தயங்காதவன்
அவனை தமிழக தமிழனாக நினைத்து கொண்டு தமிழனுக்கு மதமில்லை என சொல்ல சென்ற கும்பல்களை போட்டு அடித்துகொண்டிருக்கின்றான்
ஈழதமிழருக்கும் கருப்பு சட்டைகளுக்குமான சண்டைகள் முற்றுகின்றன, புலிகளுக்காக எவ்வளவு செய்தோம் தெரியுமா என கருப்பு சட்டைகள் பட்டியலிடுகின்றன
விரைவில் ஈழதமிழருக்காக ராஜிவ்கொலைக்கு துணை போனது திராவிட இயக்கங்கள், ராஜிவினை நாங்கள்தான் ஈழதமிழருக்காய் கொன்றோம் என இவர்கள் கிளம்பினாலும் கிளம்பலாம்
அட ராஜிவினைத்தான் எவ்வளவு பேர் கொன்றிருக்கின்றார்கள் அங்கிள் சைமன் உட்பட..


