பெரிய வியாழன் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் யூதாசும் நினைவுக்கு வருவான்.
அந்த யூதாஸை துரோகி என சொல்வதை எல்லாம் நாம் ஆதரிப்பதில்லை, சீசரை கொன்ற புரூட்டஸுக்கும் கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பனுக்கும் உள்நோக்கம் கெடுதலாய் இருந்தது, தெரிந்தே கொன்றார்கள்
ஆனால் யூதாஸ் அப்பாவி, தெரியாமல் சிக்கி கொண்டவன், அந்த வலி காரணமாகவே அவன் செத்தான். தான் ஏமாற்றபட்டதாலே தற்கொலை செய்தான் இல்லையேல் ஒரு வட்டிகடை முதலாளியாக வாழ்ந்திருப்பான்
இயேசுவின் காலம் அவர்கள் ரோமருக்கு அடிமையாய் இருந்த காலம், இன்று பாலஸ்தீனில் இருக்கும் போராளி குழுக்கள் போல அன்றும் ஏராளமான ஆயுத கோஷ்டிகள் இருந்தன
இயேசுவின் கோஷ்டி இதில் சேரவில்லை என்றாலும் கூட்டம் அவரை அப்படி தொடர்ந்தது, காரணம் அதுவரை யூத குலத்து இறைவாக்கினர்கள், கடவுளின் கைப்பாவை எல்லாம் பெரும் கெத்து காட்டின, அரசவையிலும் ஆலயத்திலும் மட்டும் அவை கம்பீரமாய் வீற்றிருக்கும்
ஆனால் இயேசு இந்துக்களின் சித்தர் சாயலை காட்டினார், அந்த யூத குலத்துக்கு அது புதிது, மகா புதிது
அப்படி ஒரு வல்லமையுள்ள மனிதன் தங்களோடு தங்களாக திரிவதிலும் நோயினை குணபடுத்தி , பாவிகள் ஒதுக்கபட்டோரோடு இந்த எம்ஜி ராமசந்திரன் போல் இயேசு இயல்பாக கலந்ததிலும் அவர்களுக்கு அவ்வளவு ஆச்சரியம், அவரை கொண்டாடினார்கள்
பெரும் கூட்டம் கூடி இவரே இஸ்ரேலின் மீட்பர் என கொண்டாடினார்கள், அவரை அரசனாக்கவும் முயற்சிகள் நடந்தன
இதை யூத மேலிடம் வேறுமாதிரி கவனித்தது, அதாவது இன்றைய பாலஸ்தீனில் அராபத் பின்னால் இண்டிபாதா நடந்தபொழுது இஸ்ரேல் எப்படி அஞ்சியதோ அப்படி அஞ்சியது
காரணம் ரோமருக்கு யூதர்மேல் ஒரு கண் அல்ல இரு கண்ணும் இருந்தது, அந்த இனம் ரோமை அரசனுக்கு அடங்காத இனம், கடவுளின் மக்கள் எனும் இறுமாப்பும் மமதையும் கொண்ட இனம் என்றும் அவர்களை அடிக்கடி தட்டி வைக்க வேண்டும் எனவும் எண்ணியது
ரோமை அரசும் ஒரு தந்திரம் செய்தது, எங்களுக்கு எதிராக ஜெருசமேலில் காரியங்கள் நடந்தால் ஏரோது மன்னன் கட்டிய இரண்டாம் ஆலயத்தை அழிக்கவும் தயங்கமாட்டோம் என மிரட்டி இருந்தது
ஆம் யூதன் எனும் பூதத்தை அடக்கும் விளக்கு அந்த ஆலயம்
இங்கோ மக்கள் இயேசுவினை அரசனாக்கும் அளவு கொண்டாடினார்கள்
யூத மேலிடம் கடுமையாக யோசித்தது, இயேசுவினை ஒரு நல்ல யூதனாக கூட அவர்கள் கருதவில்லை ஆனால் மனிதர் சக்திமான், சரி அது இருக்கட்டும் இவரால் குழப்பம் வந்து ரோமையர் வந்து கோவிலை அழித்தால் .. எத்தனை வருடம் கழித்து வந்த மாமணி அது?
இதனால் அன்றைய தலமை குரு சொன்னார் “நம் இனத்தை விட நம் ஆலயத்தை விட ஒரு மனிதன் அழிதல் நல்லது”
முதலில் மக்களிடம் இருந்து இயேசுவினை பிரிக்க வேண்டும், மக்களும் ரோமையரும் சேர்ந்து அவரை கொல்லவேண்டும், அவரின் சீட கோடிகளை தொலைக்க வேண்டும், யூத இனமும் ஆலயமும் காக்கபட வேண்டும், அட்டகாசமான ரஜதந்திரம் இது
வசதியாக இயேசுவின் போதனைகளில் இருந்து குறிப்பும் வைத்தார்கள் “இவன் கடவுளின் அரசு என சொல்லி ரோமரின் அரசுக்கு எதிராக சதி செய்கின்றான்
மகா முக்கியமாக ஜெருசலேம் ஆலயம் இடிந்து போகும் என்கின்றான்” இன்னும் சில உண்டு
ஆழ கவனித்தால் இதன் சதி புரியும், முதலாவது வரி ரோமானியர் கொந்தளிக்க , இரண்டாம் வரி யூத மக்கள் கல் எடுக்க
இதற்கு முதலில் இயேசுவினை கை காலை கட்டி தூக்கி வரவேண்டும், ஆனால் இயேசு யார் எப்படி இருப்பார்?
ஆம் அவர்களுக்கு தெரியாது ஆலயத்திலும் அரண்மனையிலும் உலவிய அந்த கூட்டத்துக்கு அது தெரியாது, அவரின் படம் உருவம் என எதுவுமில்லை
இயேசுவும் “யாவே அழைகின்றார்” என தன் படம் போட்டு பேனர் வைக்கவில்லை, “யாவே விடுவிக்கின்றார்” என கையில் தோரா சகிதம் ஜெருசலேம் மதிலில் போஸ்டராக இருக்கவில்லை
அது போக தன் சீடரில் 12 பேரை தவிர பலரை தயார் செய்து போதிக்க அனுப்பினார், 12 பேரில் கூட யார் இயேசு என்பதை கண்டறிய சிரமம், மகா சிரமம்
இயேசுவின் புகழும் வல்லமையும் தெரியுமே அன்றி அவர்களுக்கு இயேசுவினை தெரியாது
சுருகமாக சொன்னால் இன்றைய ஆப்கனில் எல்லாம் தாடியும் முகமூடியுமாக அலையும் அல்லவா? அதில் முல்லா ஓமரை கூட கண்டறியாமல் அமெரிக்கா திணறியதல்லவா?
அமெரிக்கா காந்தகாரில் முல்லாவினை தேடிய பொழுது அவர் அமெரிக்க படைகளிடம் மணி என்ன என கேட்டுவிட்டு கூட நடந்தார் என்பார்கள்
அப்படித்தான் இயேசு கூட்டத்தின் நடமாட்டமும் இருந்தது
இதனால் அவரை அடையாளம் காட்ட யூதாஸை வளைத்தார்கள், அவரை கொல்வோம் என சொன்னால் உயிரே சென்றாலும் யூதாஸ் காட்டிகொடுத்திருக்க மாட்டான்
மாறாக அவன் இயேசு கோஷ்டியில் காசாளர் எனும் கேஷியராக இருந்தான், நன்கொடை என 30 வெள்ளி காசுகளை கொடுத்து அவனை வளைத்தார்கள், “அந்த நபர் அரசராக மாட்டார் நாங்கள் அவரை அரசராகக் திருவுளம் கொண்டோம், இதை சொல்லாதே தப்பி ஓடிவிடுவார், நாங்கள் எங்கள் ஆட்களை அனுப்புவோம் பிடித்து கொண்டுவந்து பட்டாபிஷேகம் செய்யலாம், அங்கும் நீதான் நிதி அமைச்சர் என்ன சரியா?”
(இது பைபிளில் இல்லை என்றாலும் அதுதான் நடந்தது என்கின்றது கிரேக்கர் ரோமானியர் எழுதிய குறிப்புகள்)
இதில்தான் மயங்கி இயேசுவுக்கு நல்லது செய்வதாக நினைத்து காட்டி கொடுத்தான் யூதாஸ்
சூழ்ச்சியில் மிக மிக வல்லவர்களான யூதரின் கொடூர சூழ்ச்சி அவனுக்கு புரியாது, இவ்வுலகில் அன்றிலிருந்து மாறா விஷயம் சூரியன் சந்திரன் மட்டுமல்ல யூதரின் இந்த குறுக்கு புத்தியும் கூட
அப்படி இயேசு அகபட்டதும் அவரை யூத அரசன், ரோமையின் பிலாத்து என நிற்க வைத்து விசாரித்தார்கள், அதிலும் பிலாத்து அவரை விடுவிக்க எண்ணிணான்
ஆனால் யூத குருக்களின் தந்திர சங்கிலி அவனை அட்டகாசமாக கட்டியது, உண்மையில் தேர்ந்த தந்திரம் அது, அதே இரு வரிகளை எடுத்து வீசினார்கள்
“பிலாத்துவே இவன் கடவுளின் அரசு என சொல்லி ரோமரின் அரசுக்கு எதிராக சதி செய்கின்றான். ஏ மக்களே இவன் முக்கியமாக ஜெருசலேம் ஆலயம் இடிந்து போகும் என்கின்றான்”
பிலாத்து வசமாக சிக்கினான் இயெசுவினை விடுவித்தால் அது சீசருக்கு எதிரான சதி , ரோமை செனட் தொலைத்தே விடும் என்ன செய்யலாம் எதற்கும் இயெசுவினை அடித்து மன்னிப்பு கேட்க சொல்லலாம் என அடித்தும் பார்த்தான்
ஆனால் பிலாத்தின் உட்குறிப்பை உணர்ந்த யூத குருக்கள் மக்களை தூண்டி விட்டார்கள் “ஏ கடவுளின் இனமே, உன் கடவுளின் ஆலயத்தை இடிப்பேன் என சொன்னவன் சாக வேண்டாமா?” சொல்லிவிட்டு தன் ஆடையினை கிழித்தார் மதகுரு
குருவின் ஆடை கிழிந்தால் ஒருவன் சாக வேண்டும் என சட்டம் உண்டு, குறிப்பால் அதை தந்திரமாக உணர்த்தினார் குரு
அவ்வளவுதான் கூட்டம் சட்டென இயேசுவினை கொல் கொல் என எக்காளமிட்டது, அதிர்ந்த பிலாத்து இயேசுவினை கொல்ல உத்தரவிட்டு கை கழுவினான்
இதில் பிலாத்துவுக்கே எச்சரிக்கை சொன்னது யூத கூட்டம் “பாத்தாய பிலாத்து, எங்கள் ஆலயத்துக்கு ஒன்று என்றால் மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள், உன் அரச குறிப்பில் எழுதி ரோமுக்கு அனுப்பு”
இயேசுவினை தொலைத்து, ரோமையருக்கு எச்சரிக்கை செய்து, மக்களாலே இயேசுவினை கொல்லவைத்து இந்த ராஜதந்திர கண்ணிகள் யூதரை தவிர இன்னொரு இனத்துக்கு சாத்தியமே இல்லை
இயேசுவினை மன்னராக்குவார்கள் என எதிர்பாத்த யூதாஸ் நடப்பதை கண்டு மனமொடிந்து அந்த வஞ்சக கூட்டத்திடம் அழுதான்
அவர்களோ இது உன்பாடு என்றார்கள், அவர்களின் கோர முகத்தில் அந்த 30 காசுகளையும் எறிந்துவிட்டு விரக்தியில் இருந்தான் யூதாஸ்
இனி அவனால் இயேசு முகத்தில் விழிக்க முடியாது, சீடர்கள் விடமாட்டார்கள், யாருக்கும் எதுவும் புரியவைக்கவும் முடியாது
வேறுவழி? அவன் தற்கொலை செய்தான்
யூதர்களோ அவன் பணத்தை தொடாமல் பிணங்களை அடக்கம் செய்ய நிலம் வாங்க சொல்லி ஒதுங்கினார்கள், ஆம் இயேசுவின் ரத்த பணம் அது எனும் அச்சம் அவர்களுக்கு நிறைய இருந்தது
ஒரு விதத்தில் பார்த்தால் யூதாஸ் அப்பாவி, அவனுக்கு துரோகம் செய்யும் மனமெல்லாம் இல்லை, அப்படி ஒரு திட்டமே இல்லை ஆனால் விதி மயக்கியது
அவன் என்ன? இயேசுவுக்கே தன்னை கொல்ல போவது தெரியும், அவரும் கெத்சமணியில் கதறித்தான் பார்த்தார், ஏன் சிலுவையில் கூட கதறினார்
ஆனால் இது கடவுளின் விதி என்பது அவருக்கும் புரிந்தது எனினும் அந்த மானிட சுபாவம் அவரையும் வாழ சொல்லி உள்ளூர கெஞ்சியது
யூதாஸை இயக்குவது கடவுளே என்பதும் அவருக்கும் புரிந்தது, கடவுளின் விதிப்படியே யூதாஸ் தன்னை காட்டி கொடுப்பான் என்பதை என்றோ உணர்ந்தவர் அவர், ஆயினும் யூதாஸோடே சுற்றினார் ஏன்?
கடவுளின் திட்டம் அதுவானால் யூதாஸ் என்ன செய்யமுடியும்?
நிச்சயம் யூதாஸ் தவறு செய்தான் ஆனால் அறியா தவறு, அவன் சாக எண்ணாமல் இயேசுவிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் அந்த கருணா மூர்த்தி அவனை மன்னித்திருப்பார்
அவனும் இன்று பீட்டர், பால் போல பெரும் அப்போஸ்தலனாக இருந்திருப்பான், ஆனால் அவன் இயேசு மன்னிக்கவே மாட்டார் என எண்ணி செத்துவிட்டான் பாவம்
பெரிய வியாழன் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் யூதாசும் நினைவுக்கு வருவான், யூத கூட்டம் எவ்வளவு பொல்லாதது என்பதும் நினைவுக்கு வரும்
ஆனால் யூதாஸை புரிந்து கொள்ளா கிறிஸ்தவ கூட்டம் அவன் வஞ்சகன், பேராசைகாரன் என சொல்லும் உண்மை அது அல்ல
அவன் வஞ்சகனாயிருந்தால் ஏன் காசை விட்டு எறிய போகின்றான், ஏன் சாக போகின்றான்?
நிச்சயம் அவன் நல்லவன், மனசாட்சியுள்ள்ள நல்லவன்
இயேசுவுக்காய் முதலில் செத்த கிறிஸ்தவன் அவனே, சாட்சியாய் செத்த முதல் அப்போஸ்தலன் அவனே
ஆனால் அவனுக்கோர் கோவிலுமில்லை, அவனை நினைவுகூர்வார் யாருமில்லை, மாறாக தூற்றுகின்றார்கள்
அன்று இயேசுவின் தலமை சீடர் பேதுரு என்பவனே யூதருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தார், ஆனால் யூதாஸ் இயேசு கொல்லபடுவதை காண சகிக்காமல் அவருக்கு முன்பே செத்தான்
இயேசுவின் சீடர்களில் மகா நல்லவன் அவனே
கடவுளின் நாடகத்தில் அவன் வெறும் கருவி, கொஞ்சமும் சுயநலமின்றி தன் விசுவாசத்தினை காட்ட அறியாமல் சிக்கி கொண்ட ஒரு அப்பாவி
நிச்சயம் அவனுக்கும் நாலு சொட்டு கண்ணீர் விட வேண்டும், அறியா பாவத்துக்காக அறிந்து செத்த அந்த மனசாட்சி கொண்ட நல்லவனுக்காக ஒரு ஆலயம் எழுப்பபடவும் வேண்டும், அவனின் பெயர் கிறிஸ்துவத்தில் நல்லோர் பட்டியலில் சேர்க்கபடவும் வேண்டும்
இனியாவது கிறிஸ்தவம் அவனை பழிக்காமல் இருக்கட்டும்.
பெரிய வியாழகிழமை அவனுக்காகவும் சில சொட்டு கண்ணீர் விட்டால் நாம் அறியாமல் செய்யும் பாவங்களுக்கும் மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்