பெரும் அறிவு ஜீவிகள்

இந்த யூடியூப் சேனல் பக்கம் சென்றால் பெரும் அறிவு ஜீவிகள் எல்லாம் அங்குதான் இருக்கின்றார்கள்

இந்தியாவிடம் எஸ் 400 சிஸ்டம் உள்ளதாம், அதை பார்த்து உலகமே மிரள்கின்றதாம், அலறுகின்றதாம்

குறிப்பாக சீனா நூடுல்ஸ் கூட சாப்பிடாமல் அஞ்சி இந்தியா நோக்கி கதறுகின்றதாம்

இந்த பைத்தியகார வீடியோவினை பல்லாயிரம் பேர் பார்த்து கைதட்டி இருகின்றார்கள் என்பதுதான் சோகம்

எஸ் 400 சிஸ்டம் ரஷ்ய தயாரிப்பு, அதை என்றோ வாங்கிவிட்டது சீனா

பின் துருக்கி உட்பட பல நாடுகளில் உண்டு, சிரியாவில் எஸ் 300 உண்டு

இதனிடையே எஸ் 500 எனும் மேம்படுத்தபட்ட தயாரிப்பு தயார் என ரஷ்யா சொல்ல வாங்க தயார் என சீனா சொல்லிவிட்டது

இதெல்லாம் சர்வதேச யுத்தி

சும்மா கொடுக்கமாட்டார்கள், ஒரு நாட்டுக்கு தேவை ஏற்படுத்திவிட்டு விற்பார்கள், மற்றொருநாடு தானாக வந்து காலில் விழும்

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஒரே பொருளை விற்கின்றது ரஷ்யா

இது புரியாமல் இந்தியாவினை பார்த்து உலகம் மிரண்டு புரண்டு அழுகின்றது என யூடியூப் ஞானிகள் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

இன்னும் பல பார்க்க சுவாரஸ்யமாக இருகின்றது அவ்வளவு பொய்யும் பரிதாபமும்

இதற்கு இருக்கும் நேயர்களை நினைத்தால்தான் பயமாக இருக்க்கின்றது, நாளை யுத்தம் என்றால் இவர்களே எதிரியிடம் ஒன்றுமில்லை என நடந்து சென்று சிக்கினாலும் சிக்கிவிடுவார்கள் போல..