பெரும் ஆபத்து?

ஏற்கனவே 100 நாள் வேலைதிட்டம் என ஒன்றை சொல்லி பலரை சோம்பேறியாக்கி விவசாய வேலைகளை முடக்கியாயிற்று

இனி மாதம் 6 ஆயிரம் என சொல்லி கட்டுமானம் முதல் வீட்டுவேலை வரை முடக்கபோகின்றார்கள்

இந்த இம்சை அரசியல்வாதிகளிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்

வெளிநாட்டில் இருந்து வேலையாட்களை தருவிக்கவாவது சட்டத்தை தளர்த்துங்கள், ஆப்ரிக்கா போன்ற 3ம் உலக நாடுகளில் இருந்தாவது விவசாயத்திற்கும் வீட்டு வேலைக்கும் ஆட்களை தருவிப்போம்

அதை செய்துவிட்டு மாதம் 6 ஆயிரம் என்ன 10 ஆயிரமும் கொடுங்கள், சில தொழில்களாவது இயங்கும்

மக்களுக்கு உழைக்க கற்று கொடுங்கள், சிந்திக்க கற்றுகொடுங்கள். உழைத்து வாழும் சமூகமே நாட்டை உயர்த்தும்

“வயிற்றுக்கு சோறு போடு மூளையினை மழுங்கடி” என சோறுபோட்ட எந்த நாடும் உருப்பட்டதே இல்லை

இந்தியாவும் அவ்வழி செல்வது பெரும் ஆபத்து..