பெரும் விமான விபத்தை சாகசமாக தவிர்த்த விமானி
ரஷ்யாவில் பெரும் விமான விபத்தை சாகசமாக தவிர்த்த விமானிக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன
மாஸ்கோவில் இருந்து கீரிமியாவுக்கு சென்ற அந்த விமானம் பறவை கூட்டத்தில் மோதியிருக்கின்றது பறவைகள் விமான எஞ்சினில் சிக்கியிருக்கின்றன இரு எந்திரமும் கோளாறானது
விமானம் கிளம்பி சிறிது நேரமே ஆகியிருந்ததால் பெரும் உயரம் எட்டவில்லை இதனால் பிளோட்டிங் எனப்படும் முறையிலும் தரையிறக்க முடியாது
விமானி மிக சாமார்த்தியமாக விமானத்தின் முன் பகுதியினை தரையினை நோக்கி சாய்த்து பின் தரையினை நெருங்கியவுடன் சமபடுத்தி சோளகாட்டில் லேண்டிங் செய்து பெரும் சாகசம் புரிந்துவிட்டார்
சோளக்காட்டில் இறக்கி மக்களை காப்பாற்றுவது சாதாரணம் அல்ல, மரண முயற்சித்தான். ஆனாலும் சாவது உறுதி என்ற நிலையில் போராடியிருக்கின்றார் வெற்றி கிடைத்திருக்கின்றது
அப்பக்கம் வீடுகளும் கட்டங்களும் இல்லாதது இன்னொரு அனுகூலம்
நாம் அவர் விமானத்தை சோளவயலில் இறக்கினார் என சிம்பிளாக சொல்லிவிட்டாலும் விமானதுறை பரிபாஷையில் அது மாபெரும் சாகசம்
அதனால் அவருக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன
233 பேர் உயிரையும் 233 குடும்பத்து நிம்மதியும் அவர் சாகசத்தால் காக்கபட்டிருக்கின்றது
இதே நேரம் இந்தியாவில் ஒரு விசித்திரம் நடந்திருக்கின்றது, டாமன் விமான நிலையத்தில் இறங்க வந்த உள்நாட்டு விமானம் ஒன்று ரன்வேயில் ஏகபட்ட நாய்கள் படுத்திருப்பதை கண்டு திரும்பி சென்றிருக்கின்றது
இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகம் நாயகளை விரட்டிவிட்டு அவற்றை எப்படி கட்டுபடுத்த என யோசித்து கொண்டிருக்கின்றது
ஆக ரஷ்ய விமானி 233 மக்களை காப்பாற்றியிருக்கின்றார், இந்திய விமானி 200 நாய்களை காப்பாற்றியிருக்கின்றார் இன்னும் இப்படி காப்பாற்றுதல் செய்திகள் வர வர உங்களுக்கு தருகின்றோம்
மிக முக்கியமான ஆறுதல் காஷ்மீரில் அமைதியும் நல்லிணக்கமும் காப்பாற்றபட்டிருக்கின்றது, பெரும் களபேரம் வெடிக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் வழமையான சுதந்திரதினமாகவே அது அங்கு கடந்து சென்றிருகின்றது
