பெரோஸ் காந்தி

அந்த குடும்பம் நேரு குடும்பம் அல்லவா? பின் நேரு பெயரை சொல்லாமல் காந்தி என மாற்றி கொண்டது ஏன் எனும் விவாதம் பாராளுமன்றம் வரை சென்றுவிட்டது

ஆங்காங்கே எப்படி வந்தது காந்தி பெயர் என ஏகபட்ட விவாதங்கள், நாமும் நம் பங்கிற்கு சில விஷயங்களை சொல்லி வைப்போம்

இந்திராவின் கணவரும், இன்றைய ராகுலில் தாத்தாவுமான அந்த பெரோஸ் காந்தி, காங்கிரஸ்காரர்களால் மட்டுமல்ல மொத்த இந்தியாவுமே மறந்துவிட்ட நபர் அவர், அப்படி ஒருவர் அரசியலில் இருந்த அடையாளம் கூட இன்று இல்லை, சோனியாவும் மேனகாவும் கூட தங்கள் மாமனாரை தேடியது இல்லை

பிரியங்காவுக்கும் இல்லை , தான் பிரியங்கா வதேரா என பெயர் சூட்டும் அம்மையார் தன் குடும்பத்துக்கு காந்தி பெயர் வந்தது எப்படி என்பதையும் சொல்லவில்லை

பெண்ணாதிக்க காங்கிரஸ் அது

காந்தி என இந்திரா காலத்தில் ஆனந்த பவனில் பெயர் நுழைய காரணம் அந்த ப்ரோஸ் கான் அல்லது பெரோஸ் காந்தி

அவரை பற்றி 3 விதமான தகவல் உண்டு உண்டு. முதலாவது அவர் இஸ்லாமியர் எனவும் அவரை காதலித்து திருமணம் செய்த இந்திரா தன் பெயரை மைமுனா பேகம் என மாற்றியதாகவும், ஜின்னாவிற்கு எதிர் அரசியல் செய்த நேரு இதனால் அஞ்சி அவரை பெரோஸ் கானில் இருந்து பெரோஸ் காந்தியாக மாற்றியதாக ஒரு செய்தி

இரண்டாவது பெரோஸ்கானை காந்தி தத்தெடுத்து தன் மகனாக ஏற்று பெரோஸ் காந்தியாக மாற்றி நேரு மகளுக்கு திருமணம் செய்துவித்ததாக ஒரு செய்தி ஆனால் காந்தி தன் வாழ்வில் எதையும் மறைக்காதவர், இப்படிபட்ட சம்பவம் நடந்ததாக அவர் சொல்லவே இல்லை

மூன்றாவது விஷயம் பெரோஸின் இயற்பெயர் பெரோஸ் ஜெகங்கீர் காந்தெ என்றும் அவர் பார்சி என்றும், பெரோஸ் காந்தே எனும் பெயர் பெரோஸ் காந்தியாக மாறிற்று என்பதும் இன்னொரு செய்தி

அவர் பார்சி என்பதே பலரும் ஒப்புகொள்ளும் விஷயம், காரணம் அன்று அந்த பீர் சப்ளை வியாபாரம் பார்சிகள் கையிலே இருந்தது, பெரோஸ் நேருவின் அலகாபாத் மாளிகைக்கு ஒயின் சப்ளை செய்த வியாபார குடும்பத்துக்காரர்

( இங்கேயும் தான் ஒரு கவுல் பாப்ப்பனர் என சொல்லி தன் தாத்தா பார்சி அல்ல என குழப்புவர் திருவாளர் ராகுலார் )

அடிப்படையில் பெரோஸ் பத்திரிகைக்காரர், நல்ல பத்திரிகைக்காரர். ஒரு பத்திரிகைகாரனுக்குரிய நேர்மை துணிவு எல்லாம் அவரிடம் இருந்தது

இந்திராவும் பெரோஸும் நன்றாகத்தான் லக்னோவில் வாழ்ந்தார்கள், இரு குழந்தைகள் பிறந்த பின்பே தந்தையின் ஆனந்த பவனுக்கு இந்திரா குடிபெயர்ந்தார் அதன் பின்பே நெருடல் வந்தது

நெருடலும் குடும்ப உறவில் வரவில்லை, நேருவின் சில காரியங்களை பரோஸ் வன்மையாக கண்டித்தார் அதிலிருந்தே மோதல் தொடங்கியது

ஆம், பெரோஸ் நாடளுமன்ற உறுப்பினர், ஆனால் எதிர்கட்சி இல்லா காங்கிரஸின் அரசின் நேரு எதிரியே இன்றி செங்கோல் செலுத்தினார். இந்த பலத்தில் பல காங்கிரசார் ஊழலில் ஈடுபட்டனர்

பெரோஸ் அதை துணிச்சலாக அம்பலபடுத்தினார், பல அரசியல்வாதிகள் பெரோஸால் சிறை சென்றனர்

டிடி கிருஷ்ணமாச்சாரி எனும் நிதி அமைச்சர் பெரோஸ் காந்தி வெளிபடுத்திய விஷயங்களால் பதவி இழந்தார். காப்பீட்டு துறையின் ஊழலை பெரோஸ் அம்பலபடுத்த அது அரசுடமையனாது

எல்.ஐ.சி எனப்படும் இந்தியாவின் மிகபெரும் நிதிசுரங்கம் அரசுடமை ஆக்கபட பெரோஸ் காந்தியே காரணம்

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், சுதந்திர இந்தியாவின் முதலில் நேருவினை பகிரங்கமாக எதிர்த்தவர் காங்கிரஸின் சர்வ அதிகாரத்தை எதிர்த்தவர் பெரோஸ், அவ்வகையில் முதல் சங்கி அவர்தான்

பெரோஸின் இந்த செயல்பாடு நேருவிற்கு கடும் எரிச்சலை கொடுத்தது, கரைபுரண்டோடிய‌ காங்கிரசாரின் ஊழலை அவர் கண்டும் காணாமல் இருந்தார், பெரோசையும் அப்படி இருக்க சொன்னார்

ஆனால் பத்திரிகா தர்மத்தை காத்த பெரோஸ் மறுத்தார், இந்திரா தந்தையின் மேலுள்ள பாசத்தில் பெரோஸை எதிர்க்க பிளவு வலுத்தது

ஆனாலும் அஞ்சவில்லை பெரோஸ், 1959ல் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை நேரு கலைத்தபொழுது இது பாசிசம் என முதலில் சொன்னவர் பெரோஸ்

இந்திரா ஒரு சர்வாதியாக உருவெடுப்பார், இந்தியாவின் தாய் என தன்னை நினைத்து கொள்கின்றார், இந்த பரந்துபட்ட நாட்டில் எல்லோரையும் அரவணைத்து செல்ல அவருக்கு துளியும் விருப்பம் இல்லை என முதலில் சொன்னவர் பெரோஸ்

பின்னாளில் இந்திரா ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்குவார் என முதலில் சொன்னவர் பெரோஸ்

காங்கிரசின் சர்வாதிகார போக்கு ஒரு கட்டத்தில் காங்கிரசையே நாசமாக்கும் என முதலில் சொன்னது அவர்தான்

ப்ரோஸ் காந்தியின் ஒரு மாபெரும் காரியத்திற்காக இத்தேசம் அவருக்கு நன்றிகடன் பட்டிருக்கின்றது

அதாவது அந்நாளில் பாராளுமன்ற நடவடிக்கைகள் வெளிதெரியாது, யாராவது வெளிவந்து பத்திரிகைகளில் சொன்னால், அது சர்ச்சையானால் கூட சட்டம் பாயும்

அப்படித்தான் இருந்தது நேரு காத்த ஜனநாயகம், இன்றிருக்கும் வெளிபடை தன்மை அன்று இல்லை

நாடாளுமன்றம் என்பது ரகசியமாகவே நடைபெற்றது, பத்திரிகையாளருக்கு எல்லாம் ஒன்றும் சொல்லபடாது, நாடாளுமன்ற விவகாரங்களில் பத்திரிகை சுதந்திரம் என்பது அவ்வளவு இல்லை

முதன் முதலில் இதனை எதிர்த்தவர் பெரோஸ், அதற்காக ஒரு மசோதாவே கொண்டுவந்தார், பின்னாளில் அதுதான் “ப்ரோஸ் காந்தி பத்திரிகை சட்டம்” என அறியபட்ட சட்டம்

ஆம் இன்று காணும் நாடாளுமன்ற நேரலை போன்ற விஷயங்களுக்கு மூலமே அந்த சட்டம்தான்

பெரோஸின் அந்த நடவடிக்கை மேல் இந்திராவிற்கு எவ்வளவு வெறுப்பு இருந்தது என்றால், அதை குப்பையில் போட்டுவிட்டுத்தான் அவசர நிலையினை பிரகடனபடுத்தினார்

மீண்டும் பெரோஸ்கானின் சட்டத்தை கொண்டுவந்தது பின்னாளைய ஜனதா அரசு

ஆம், இப்படித்தான் இந்திராவும் பெரோஸும் அரசியல் மோதி இருக்கின்றார்கள்.

ஆழ கவனித்தால் ப்ரோஸ் நிச்சயம் மாமனிதர். அவர் கொஞ்சம் அசைந்து கொடுத்திருந்தால் இன்றைய ராப்ர்ட் வதேரா போல ஹாயாக அமர்ந்து பிசினஸ் செய்திருக்கலாம்

ஒயின் பிசினஸை இந்தியா முழுக்க குத்தகைக்கு எடுத்து உலக பணக்காரன் ஆகியிருக்கலாம்

ஆனால் அந்த மனிதன் பத்திரிகையாளராய் நின்றான், அதற்கு தன் மனைவி மாமனார் எல்லோரையும் பகைத்தான்

ஊழல் , எதேச்சதிரிகாரம், சர்வாதிகாரம் இவற்றை எதிர்த்து தன் இரு குழந்தைகளையும் பிரிந்து தனியாக நின்று போராடினான்

ஓரளவிற்கு வெற்றியும் பெற்றான்

நிச்சயம் காங்கிரசில் அந்த மனிதனுக்கு தனி இடம் உண்டு, ஆனால் இந்திராவிற்கு அஞ்சி அவர் ஒதுக்கபட்டார், அப்படியே மறக்கவும் பட்டார்

பெரோஸை வெறுத்த இந்திரா அவரால் பெற்ற காந்தி எனும் பெயரை மட்டும் வெறுக்கவில்லை தன்னுடனே வைத்து கொண்டார்

அது ராஜிவ், சஞ்சய், சோனியா, மேனகா என தொடர்ந்து இன்று ராகுல், வருண் வரை வந்தாயிற்று

நிச்சயம் மகாத்மா காந்திக்கும் நேருகுடும்பதிற்கும் மண உறவு இல்லை

காந்தி எனும் பெயர் பெரோஸ் கொடுத்தது, இதை எல்லாம் இன்று நினைத்து பார்ப்பார் யாருமில்லை

சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் ஒழிப்பு , பத்திரிகை சுதந்திரம், கருத்துரிமை சுதந்திரம் என முதலில் குரல் கொடுத்தவர் பெரோஸ் கான்

அதை தன் சொந்த மாமனாருக்கும் மனைவிக்கும் எதிராக எழுப்பினார் என்பதுதான் கவனிக்கதக்கது

அவர் எழுப்பிய அந்த குரல்தான் பின் ஜனதா, திமுக என நாடெல்லாம் காங்கிரஸ் எதிர்ப்பினை கொடுத்தது, பாஜகவாக இன்று வளர்ந்து நிற்கின்றது

பெரோஸின் வழியில்தான் மேனகாவும் வருண் காந்தியும் பாஜகவில் நிற்கின்றனர்

பெரோஸின் புதல்வர்களில் அவரின் குணம் ராஜிவிற்கும், இந்திராவின் அடாவடி குணம் சஞ்சய்க்கும் வந்தது

சஞ்சய் காந்தி ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, ராஜிவின் பெருந்தன்மையும் சாதாரணம் அல்ல‌

ராஜிவினை போலவே பெரோஸ் சாகும் பொழுதும் அவருக்கு வயது 47

ஆம் மிக குறைந்த வயதில் இறந்தார் பெரோஸ், அவரை தொடர்ந்து அந்த துரதிருஷ்டம் அந்த குடும்பத்தையும் பிடித்தது

பத்திரிகையால் ஊழலை வெளிகொணர முடியும், நாட்டை சர்வாதிகார பிடியில் இருந்து காக்க முடியும் என செய்து காட்டியவர் பெரோஸ் காந்தி

அவர் ஒரு பார்சியா இல்லை இஸ்லாமியரா என்பது டிரில்லியன் டாலர் கேள்வி, அவர் கானா இல்லை காந்தேயா என்பதும் தெரியவில்லை

இந்திய வரலாற்றின் மர்ம பக்கங்களில் இதுவும் ஒன்று

ஆனால் அவர் திருமணம் காந்தி காலத்தில் நடந்தது, அதன் பின்பே அவர் பெரோஸ் காந்தியாக மாறியிருக்கின்றார், அப்பொழுது ஏதோ ஞானஸ்நானம் நடந்திருக்கலாம் வாய்ப்பு அதிகம்

எது எப்படியாயினும் அந்த பெரோஸ் அக்காலத்தில் பாரதிய ஜனதாவின் தாய் சங்கமான ஜனசங்கத்துடன் சேர்ந்து நேரு, இந்திராவின் முழு அதிகார போக்கினை கண்டித்தவர், ஊழலுக்கு எதிராக போராடியவர் என்பதுதான் வரலாறு, அதை யாரும் மறுக்கமுடியாது

அவ்வகையில் அவர் ஒரு முழு சங்கி, காங்கிரசை எதிர்த்து நின்ற சுத்தமான சங்கி