பெற்ற தாயே பிள்ளைகளை கொல்லும் சம்பவம்

பெற்ற தாயே பிள்ளைகளை கொல்லும் சம்பவம் தமிழ்நாட்டில் அதிகரித்துவருவது சோகம்

அது நல்லதங்காள் காலத்திலே இருந்தது எனினும் அன்றெல்லாம் அதற்கு கொடும் வறுமை அன்றி வேறுகாரணமில்லை

இன்றோ கள்ளக்காதல் விவகாரங்களே பெரும் சிக்கலாகின்றன‌

எதனையோ தேடி யாரிடமோ வகையாக சிக்கிவிடும் பெண்களுக்கு தாய்பாசம் விடைபெற்றுவிடுகின்றது

தாங்கள் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதாக கருதி முன் பெற்ற பிள்ளை இனி தேவையில்லை என நினைத்து கொன்றுவிடும் கலாச்சாரம் பெருகுகின்றது

ஏதோ மயக்கத்திலும், அவன் மீது வந்த நம்பிக்கையிலும், புதுவாழ்வு பூரிப்பிலும் தாய்பாசம் விடைபெற்று அவள் கொலைக்கும் துணிந்துவிடுகின்றாள்

நேற்று ராணிபேட்டையிலும் ஒரு குழந்தை தாயால் கொல்லபட்டிருக்கின்றான்

ஒவ்வொரு சம்பவத்தையும் கவனமாக நோக்கினால், அந்த திருட்டு கள்ளகாதலனே கொலை திட்டம் வகுக்கின்றான்

அப்பெண்களும் அம்மயக்கத்தில் பெற்ற குழந்தையினை நல்ல பாம்பு தன் குட்டியினை தானே விழுங்குவது போல் விழுங்கிவிடுகின்றனர்

முயல் தன் குட்டிகளை கடிப்பது போல குதறிவிடுகின்றனர்

ஆனால் அவள் சிக்கிகொண்டதும் அந்த திருட்டு காதலன் பறந்துவிடுகின்றான், அகபட்டாலும் அவனுக்கு தண்டனையில்லை

நானும் அவளும் சேர்ந்து திட்டமிட்டோம் என எவனும் அவளுக்காகவோ அவளை காக்கவோ வந்து நிற்பதுமில்லை, நிற்க போவதுமில்லை

எவனுக்காக கொலைவரை அதுவும் பெற்ற குழந்தைவரை கொல்ல துணிந்தாளோ அதை கொஞ்சமும் அவனும் உணர்வதில்லை, கயவனுக்கு ஏது மனம்?

அவள் வாழ்வினை அழித்துவிட்டு இன்னொருத்தி வாழ்வினை அழிக்க அவன் கிளம்பிவிடுவான்

ஆக முதல் கணவனிடம் வாழமுடியா விதி இன்னொருவன் மூலம் அவளை சிறைக்கே அனுப்புகின்றது

அதுவும் பின்னாளில் திரும்பி வந்தால் அரவணைக்க பிள்ளை கூட இன்றி அனாதையாக வாழும் அளவு அவளை திட்டமிட்டு வாட்டுகின்றது

காலம் வரை தன் விதியினை நொந்து, தான் செய்த முட்டாள்தனமான கொலையினை எண்ணி எண்ணி அவள் வாழ்வு முடியவேண்டும் என்பதே அவள் வாழ்வாகிவிடுகின்றது

எல்லாம் கூடா சேர்க்கையினால் வரும் கேடு அன்றி வேறல்ல‌

விதியினை மதியால் வெல்ல முடியாவிட்டாலும் விதியின் தன்மை அறிந்து தனித்து வாழும் தாய்மார்கள் முன்னெச்செரிக்கையாக இருப்பது நலம்