போராட்டம் தற்காலிக வாபஸ் : அய்யாக்கண்ணு
போராட்டம் தற்காலிக வாபஸ்- முதல்வர் பழனிசாமியை சந்தித்தபின் அய்யாக்கண்ணு அறிவிப்பு
இது ஒரு நாடகம், இரண்டாம் முறையாய் நடக்கின்றது, நீ அழுவது போல அழு,, நான் அடிப்பது போல அடிக்கின்றேன் எனும் வரிகளுக்கான நடிப்பு இதுதான்
முன்பு டெல்லியில் அம்மணமாய் நின்றவர் அய்யாகண்ணு, பழனிச்சாமி சென்று சில விஷயங்களை செய்வதாக சொன்னார், அதோடு போராட்டம் முடிந்தது
தீர்வு கிடைத்ததா என்றால் இல்லை
மறுபடியும் நேற்று போராட வந்தாய் அய்யாகண்ணு, இப்பொழுதும் முதல்வர் உறுதி கொடுத்தாராம், அய்யாகண்ணு கிளம்பிவிட்டாராம், இப்பொழுதும் தீர்வு கிடைத்த்தா என்றால் இல்லை
அய்யாகண்ணு நல்லவர் என்றால் இரண்டே கேள்விகளை கேட்கலாம், பழனிச்சாமி அவுட்
அதாவது விவசாயி செத்துகொண்டிருக்கும் பொழுது, இலவச ஸ்கூட்டி முதல் இலவச நலதிட்டம் தேவையா? எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தேவையா? மாவட்டம் தோறும் கால் இல்லாத ஜெயாசிலை, அதாவது அரையளவு ஜெயா சிலை தேவையா? என சீறியிருக்கலாம்
இதனை விட்டால் இன்னொரு கேள்வி போதும்..
நீங்கள் ஆட்சி செய்து என்னாயிற்று? 4 லட்சம் கோடி கடன் அரசுக்கு இருக்கின்றதாம், விவசாய கடனை ரத்து செய்தால் இன்னொரு 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் கோடி கூடுதல் கடனாகும்
4 லட்சம் கோடி கடன் 4 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஆகும்?அவ்வளவுதான், மலையினை சுமக்கும் தமிழக அரசு விவசாயிகளுக்காக இந்த துரும்பையும் சுமந்தால் என்ன?
விவசாயி கடனை எல்லா தமிழரும் சுமக்கட்டும் , அப்படி செய்கின்றீரா? இல்லை அம்மணமாய் நிற்கட்டுமா என்றால் அது நியாயம், அது போராட்டம், அது கோரிக்கை
அது அல்லாமல் இவர் கத்துவாராம், அவர் பேசுவாராம் உடனே இவர் போராட்டத்தை ஒத்திபோட்டு வருவாராம், பிரச்சினை அப்படியே இருக்குமாம்
அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் இருக்கின்றது என்றார்கள் சித்தர்கள், அது உண்மையோ இல்லையோ ஆட்டுகறியில் இருப்பதெல்லாம் கடல் உணவிலும் இருக்கின்றது
ஆட்டுகுடல் சுவையினை அப்படியே ஆக்டோபாசுக்குள் ஒளித்து வைத்திருக்கின்றான் இறைவன், குடல் செய்யும் பக்குவத்தில் ஆக்டோபஸை செய்தால், எங்கும் நிறைந்த இறைவனை ஆட்டு குடலில் கண்டது போலவே ஆக்டோபஸ் வறுவலிலும் காணலாம்
எத்தனை கோடி சுவையினை வைத்தாய் இறைவா…….