பொதுமக்களின் நலன் பலிகொடுக்கபடுகின்றது..
உலகெல்லாம் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் குறையாது, ஆனால் உலக சந்தையில் விலை கூடினால் உடனே இங்கு பெட்ரோல் விலையினை கூட்டுவார்கள்
எரிபொருள் என்றால் கச்சா எண்ணெய் வகையறா மட்டுமல்ல, இந்த நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு சமாச்சாரங்களும் வரும்
பல நாடுகளின் பொருளாதார மந்தம் சில நாடுகள் மின்சார பேட்டரி உபயோகத்திற்கு மாறுதல் என பல காரணங்களால் இந்த நிலக்கரியும் இயற்கை எரிவாயுவும் தேடுவாரற்று கிடக்கின்றது
கடும் விலை வீழ்ச்சி
இந்தியாவின் அணல்மின் நிலையங்கள் பெரும்பாலும் நிலக்கரியினை நம்பி இருப்பதால் நிச்சயம் மின்சார விலையினை கடுமையாக குறைக்கலாம், பல நாடுகள் பரிசீலிக்கின்றன
ஆனால் இந்தியாவில் இதுபற்றி எல்லாம் சிந்திப்பார் யாருமில்லை, அரசுகளுக்கோ அப்படி ஒரு எண்ணமே இல்லை
நிச்சயம் நிலக்கரிவிலையும் இயற்கை எரிவாயு விலையும் தாழ கிடக்கும் பொழுது மின்கட்டணமும் சமையல் எரிவாய்வு கட்டணத்தையும் நன்கு குறைக்கலாம்
மின் கட்டணம் குறையும் பட்சத்தில் ஓரளவு எல்லா விலைவாசியும் கட்டுக்குள் வரும் அல்லது குறையும்
நிலக்கரி விலை கடும் வீழ்ச்சியான இந்நேரத்தில் மின்கட்டண குறைப்பை செய்யலாம்தான்
ஆனால் செய்யமாட்டார்கள், இந்திய மற்றும் தமிழக அரசு நிலைப்பாடுகள் அப்படி..
நிலக்கரி இறக்குமதி செய்யும் அரசு துறை மற்றும் தனியார் வியாபாரங்களை பாதுகாக்க இங்கு பொதுமக்களின் நலன் பலிகொடுக்கபடுகின்றது..