பொய் ஒன்றே மூலதனம்
திமுகவினருக்கு அன்றிலிருந்தே பொய் ஒன்றே மூலதனம், ஆனால் அக்கால திமுகவினர் பொய்யினை பொருந்த சொல்வார்கள் அவர்கள் திறமை அப்படி இருந்தது
இந்நாளைய திமுகவின் தலமையே உளறுகின்றது என்றால் அடிபொடிகள் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்
கொஞ்சமும் வெட்கமின்றி ஒரு தரவும் உருப்படியின்றி அளந்துவிடுகின்றோமே, சிலர் மறித்துசொன்னால் என்னாகும் என்ற மான உணர்வெல்லாம் கொஞ்சமும் இல்லை
இனமானம், அறிவு இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ அதை எல்லாம் கழற்றி வைத்துவிட்டுத்தான் பதிவிட வருவார்கள் போல, அல்லது நாம் என்ன சொன்னாலும் தமிழர் தலையாட்டுவர் என அவர்களாக நம்புவார்கள் போல
இதுவரை நிலவில் கால்வைத்தவர்கள் என 12 பேரை அமெரிக்கா அறிவித்திருக்கின்றது ஆம்ஸ்ட்ராங் முதல் ஹாரிசன் என்பவர் வரை உள்ள பட்டியல் அது
கவனியுஙள் 12 பேரும் அமெரிக்கர்கள், 1969 முதல் 1972 வரை இந்த பயணம் நடந்தது. 1972க்கு பின் அமெரிக்க்கா நிலவு பயணத்தை நிறுத்தியது
அமெரிக்காவின் போட்டியாளரான ரஷ்யா இன்றுவரை அமெரிக்காவின் நிலவு பயணத்தை மறுக்கின்றது, அப்படி ஒரு பயணம் சாத்தியமே இல்லை என சொல்லிவிட்டு தன் கலத்தை மட்டும் நிலாவில் இறக்கியது
சீனாவும் கலனை இறக்கியது, இந்தியா இறக்கியது
பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளின் கூட்டு கலன்கள் சிலவற்றை செய்தன, இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிந்தது
ஆக அமெரிக்கர் 12 பேர் சென்றனர் என்பதே முழுக்க உறுதிபடுத்தபடாத தகவல்
இதில் இந்தியாவின் ராகேஷ் சர்மா நிலாவுக்கு சென்றாராம், எப்படி இருகின்றது இந்த புரட்டு?
ராகேஷ் சர்மா ரஷ்ய ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர், விண்வெளியினை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்துவிட்டார்
நிலாவுக்கு எல்லாம் அவர் செல்லவில்லை, ரஷ்யரே செல்லாதபொழுது இவரை அழைத்து செல்வார்களா?
ராக்கேஷ் சர்மா இன்று ஊட்டியில்தான் ஓய்வெடுகின்றார் தகவல் வேண்டுமானால் உறுதிபடுத்துங்கள்
ஆக இந்த திமுக பகுத்தறிவு இம்சைகள் சொல்வதெல்லாம் புரட்டும் பொய்யுமே, ஒரு விண்வெளிக்கும் நிலாவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களெல்லாம் என்னவெல்லாமோ பேசுகின்றார்கள், தமிழக கொடுமை இது
அதுவும் பாருங்கள், நிலாவில் பலர் தங்கி இருந்தார்களாம். ஆம்ஸ்ட்ராங் இருந்தது 1.5 மணி நேரம், ஹாரிசான் தாங்கி இருந்தது 8 மணி நேரம்
மற்றபடி நிலவில் தாக்குபிடிக்க முடியாது.
அமெரிக்கா நிலவுபயணம் என சொல்வது மிகபெரும் பொய் என்கின்றது ரஷ்ய முகாம்
ஏதோ சிம்லாவுக்கு டூர் போனது போல நிலாவுக்கு அவர் போனார் இவர் போனார் என ஏக கதைகள்
நல்ல வேளையாக பெரியாரும் அண்ணாவும் நிலவில் சென்று கல்லில் பகுத்தறிவினை செதுக்கினர் என அன்னார் சொல்லவில்லை, அப்பல்லோ மிஷனின் 75ம் ஆண்டு விழாவில் அன்னார் இப்படி சொன்னாலும் சொல்வார்
ஏம்மா Devi Somasundaram உங்க நொண்ணன் ஏன் இப்படி ஆகிவிட்டார்?, ஏதும் குளிர்ஜூரமா இல்லை ஆடிமாதம் அம்மன் வந்து கண்ணை குத்திவிட்டதின் குளிர்காய்ச்சலா?
