பொய் சொல்வதில் நோபல் பரிசு

“கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, அண்டை நாடான, பாகிஸ்தானை எச்சரித்தோம். அதனால் தான், நம் விமானப் படை விமானி, அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்,” குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி

பொய் சொல்வதில் நோபல் பரிசு என ஒன்று இருந்தால் அது நிச்சயம் இவருக்குத்தான்

அந்த பரபரப்பான நேரங்களை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு சில விஷயம் புரியும்

அபினந்தன் கைது செய்யபட்டார், ஆனால் ஒரு கைதி எப்படி நடத்தபட வேண்டுமோ அப்படி நடத்தபடுகின்றார் என வீடியோ சகிதம் உலகிற்கு சொன்னது பாகிஸ்தான்

அவர்கள் சரியாக இருந்தார்கள்

இந்திய தரப்பில் இருந்து பெரும் கோரிக்கை ஏதும் இல்லை, ராணுவ அதிகாரிகளோ உள்துறையோ ஏன் மோடி கூட பாகிஸ்தானை மிரட்டவில்லை

உலக நாடுகள் ஜெனிவா ஒப்பந்தத்தை பின்பற்ற பாகிஸ்தானை கோரின‌

பாகிஸ்தான் அரசு ஒரு விஷயத்தில் கவனிக்க வேண்டியது உண்டு

அதாவதும் இம்மாதிரி நேரங்களில் எதிரியினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் நிபந்தனை பேரிலே விடுவிப்பார்கள்

அது எவ்வளவு பெரும் வல்லமை மிக்க எதிரி ஆனாலும் சரி, அன்று அந்த அன்னக்காவடியான கொமேனியே இப்படி அமெரிக்காவினை மிரட்டியிருக்கின்றார்

இன்னும் எங்கெல்லாமோ மிரட்டினார்கள்

அபினந்தன் பாகிஸ்தான் கையில் கிடைத்த துருப்பு சீட்டு ஆனால் ஒரு நிபந்தனையுமின்றி வெளியில் விட்டார்கள் ஏன்?

பாகிஸ்தானை ஆள்வது பிரதமர் என்றாலும் ராணுவமே பிரதான முடிவு

யாரோ ஒரு கும்பல் ஐஎஸ்ஐ பேச்சை கேட்டு இந்தியாவிடம் வம்பு இழுத்ததுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஏன் போருக்கு செல்ல வேண்டும் என்ற நிதானம் அவர்களிடம் இருந்தது

அதனால்தான் அபினந்தன் விடுவிக்கபட்டான்

இன்னொன்று ஏக சிக்கலில் இருக்கும் பாகிஸ்தான் யுத்தத்தை விரும்பவில்லை

ஆக உண்மை இப்படி இருக்க ஏதோ நாங்கள் மிரட்டினோம் 12 ஏவுகனைகளை காட்டி பயமுறுத்தினோம் என்பதெல்லாம் கட்டுக்கடங்காத பொய்

சரி 12 ஏவுகனையும் பெரும் வல்லமையும் உண்டல்லவா? நாலந்துலா பக்கம் அதை காட்டி சைனாவினை மிரட்டினால் என்ன?

அருணாச்சல பிரதேஷ் பக்கம் ஓடினால் என்ன?

செய்யமாட்டார்கள்

ராணுவத்தையும் அதன் வலிமையினையும் அரசியலாக்கும், 12 ஏவுகனை என மொத்த பலத்தையும் வெளி சொல்லும் இந்த மடத்தனத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்

பிரச்சாரத்திற்கு வேறு காரணங்களை மோடி தேடுவது நல்லது