பொருளதாரத்திற்கான நோபல் பரிசு

அபிஜித் பான‌னர்ஜி எனும் இந்திய தம்பதியருக்கு பொருளதாரத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது

அவர் கல்கத்தாவில் பிறந்தவர் என்பது பானர்ஜி எனும் பெயரிலே தெரியும், அவர் கல்கத்தாவிலும் டெல்லியிலும் பொருளாதாரம் படித்துவிட்டு அமெரிக்காவில் குடியேறினார்

அங்கேயே திருமணம் செய்தார் முதல் மனைவி இந்தியபெண் அவரோடு சிக்கல் எழுந்த நிலையில் அவரின் மகனும் இறந்தான், பானர்ஜி வாழ்வில் கடும் காலங்கள் அவை

அதிலிருந்து மீண்டு தன் சக ஆராய்ச்சியாளரான எஸ்தர் டூப்லோவினை 3 வருடம் முன் திருமணம் செய்தார், இப்பொழுது இந்த இந்தோ அமெரிக்க தம்பதியர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர்

இந்த பானர்ஜி தம்பதி வறுமை ஒழிப்புக்கான ஆய்வினை செய்ததில் நோபல் வாங்கியிருக்கின்றதாம்

இவர்கள் நோபல் வாங்கியது வாழ்த்துகுரியது என்றாலும் நோபல் குழுவின் நோக்கம் புன்னகைக்க வைக்கின்றது

உண்மையில் வறுமை ஒழிக்க மாபெரும் தத்துவமும் நூலும் கொள்கையும் வழிமுறையும் சொன்னவன் கார்ல்மார்க்ஸ், அவனின் சீடர்கள் இன்று உலகில் உண்டு ஆனால் அவர்களுக்கு நோபல் கிடையாது

வறுமை ஏன் வந்தது என சொல்பவனுக்கு நோபல் இல்லை ஆனால் அதைபற்றி ஆய்வு செய்பனுக்கு நோபலாம்

இது இன்று நேற்றல்ல தொடக்கத்தில் இருந்தே வெள்ளையனுக்கும் அவனின் மேற்குலக கும்பலுக்கும் ஜால்ரா அடிப்பவர்களுக்கே நோபல் கொடுப்பார்கள்

தவிர்க்கமுடியா நிலையில் மார்ட்டின் லுத்தர் கிங், மண்டேலா போன்றவர்களுக்கு கொடுப்பார்கள்

மகாத்மா காந்திக்கு 3 முறை நிராகரித்தார்கள், அவர் இஸ்லாமியர்கள் ஏற்ற தலைவர் அல்ல என்பார்கள், ஒரே இந்திய பிரதிநிதி இல்லை என்பார்கள் ஆனால் உண்மையான காரணம் அவர் வெள்ளையனின் நிறவெறியினை அவர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது

நோபல் அரசியல் இதுதான், வெள்ளையனை எதிர்ப்பவர்களுக்கு ஆஸ்கர் மட்டுமல்ல நோபலும் இல்லை

அப்படிபட்ட நோபல் பரிசை வாங்கியிருக்கும் பானர்ஜி இந்தியாவுக்கு எதிராக நல்ல கருத்துக்களையா சொல்வார்? சொல்லவே மாட்டார்

அதனால் இந்திய பொருளாதாரம் தடுமாறுகின்றது என என்னென்னவோ சொல்லி கொண்டிருக்கின்றார் , காரணம் அதற்காகத்தான் நோபல் கொடுத்திருக்கின்றார்கள்

உலக வறுமைக்கான காரணம் வெள்ளை நாடுகளின் போரும் சுரண்டலும் வியாபார நோக்கும் இன்னபிறவும் என அவரால் வாய்விட்டு சொல்லமுடியுமா? முடியாது

ஆனால் உண்மை அதுதான்

ஆக மனசாட்சியினை கொன்றுவிட்டு என்னமோ எழுதிவிட்டு பரிசும் வாங்கிவிட்டு ஏதோ பேசிகொண்டும் இருக்கின்றார்

அவருக்கு இங்கு நோபல் பரிசு பெற்றவர் இந்திய பொருளாதாரம் பற்றி சொன்னதை பார்த்தீர்களா என ஏக அலம்பல் வேறு…