பொருளாதார போர் தொடங்கியாயிற்று
இந்த டிரம்ப் என்பவர் அட்டகாசத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார், சீன பொருளுக்கு கோடிகணக்கான வரிவிதிப்பு என அவர் விதித்திருக்கும் புதிய அறிவிப்பால் ஆடி போயிருக்கின்றது உலகம்
இது பெரும் பாரதூர விளைவுகளை ஏற்படுத்திவிட்டது, முதலீட்டாளர்கள் இன்னபிற வியாபாரங்கள் எல்லாம் குழம்பி நிற்கின்றன
இருவருமே விடுவதாக இல்லை. மாவோ காலத்திற்கு முன்பு வரை சீனா அமெரிக்க சார்பு இல்லை. எல்லோருடனும் வம்பு இழுத்த மாவோ அன்றைய சோவியத் யூனியனுடம் லேசாக உரச சீனாவிற்கும் அவர்களுக்கும் முட்டியது
தன் கடைசி காலத்தில் அமெரிக்க சார்பெடுத்தார் மாவோ, நிக்சனை சந்தித்தார் அத்தோடு புது சீனா எழும்பியது
எந்தநாடு சல்லி விலையில் பொருள் கொடுக்குமோ அது அமெரிக்காவிற்கு பொறுக்காது, ஜப்பான் மீது அணுகுண்டு விழ அதுதான் முதல் காரணம்
ஒருவழியாக ஜப்பானை இன்று தன் கையில் வைத்துள்ள அமெரிக்கா சீனாவினையும் அப்படி கையில் எடுக்க முயற்சிக்கின்றது ஆனால் இந்த உலகை ஆண்டே தீரவேண்டும் எனும் கனவில் இருக்கும் சீனா அடங்க மறுக்கின்றது
விளைவு பொருளாதார போர் தொடங்கியாயிற்று
இத்தோடு விட்டாரா என்றால் டிரம்ப் விடவில்லை, ரஷ்யாவுடனும் வம்பிழுக்கின்றார். ரஷ்ய எண்ணெய் கம்பெனிகளுக்கு தடை, புடீனின் மருமகன் கம்பெனிக்கு ரெட் கார்டு என அவரின் அட்டகாசம் எங்கொ செல்கின்றது
ரஷ்யாவினையும், சீனாவினையும் ஒரே நேரத்தில் சீண்டுகின்றார் டிரம்ப். இதன் விளைவுகள் எங்கே எதிரொலிகுமோ தெரியாது
இப்போதைக்கு ரஷ்ய கவலை அங்கு நடக்க போகும் கால்பந்து போட்டியினை பாதுகாப்பாக நடத்துவது. ஒரு குண்டு வெடித்தாலும் ரஷ்யா இனி எந்தபோட்டியும் நடத்தமுடியா அளவு சிக்கல் வரும்
தீவிரவாதிகளை ரஷ்யா அடக்கலாம், ஆனால் பிரிட்டனும் அமெரிக்காவும் எல்லா வேடமும் போடும், அப்படி அவர்களே வைத்துவிட்டு ரஷ்யா பாதுகாப்பு மீது கேள்வி எழுப்பலாம்
இதனால் கால்பந்து போட்டி முடியுமட்டும் படு அமைதியும் கவனமும் கொண்டிருக்கின்றார் புட்டீன்