பொறுப்பற்ற தாய்மாரை தண்டிக்க கடும் சட்டபிரிவும் அதைபற்றிய விழிப்புணர்வும் மிக மிக அவசியம்
பெண்ணிய விடுதலையிலும் முற்போக்கு சிந்தனையிலும் இப்பொழுது நெல்லை முன்னணியில் இருக்கின்றது, பெரும் பெண்ணிய புரட்சி சித்தாந்தமெல்லா பரிட்சித்து பார்க்கபடுகின்றது
இரு சம்பவங்கள் அதை நிரூபித்திருக்கின்றன
முதலாவது சம்பவம் கொடூரமான கற்பனைக்கு அப்பாற்பட்ட விசித்திரம். மூன்று குழந்தைகளின் தாய் ஒருத்திக்கும் இன்னொருவனுக்கும் காதல் ஏற்பட்டு அது கட்டில் ஒப்பந்தமுமாகி அது கணவனுக்கும் தெரிந்திருக்கின்றது
அவன் கெஞ்சியிருக்கின்றான், அவனுடனும் வாழ்வேன் தடுத்தால் குழந்தைகளை கொல்வேன் என அவள் மிரட்டியிருக்கின்றாள்
ஆண் கண்ணகியாக அந்த அப்பாவி கணவனும் மனதை கல்லாக்கி வாழ்திருக்கின்றான் எனினும் குழந்தைகளை மாமனார் வீட்டுக்கு அனுப்பியிருகின்றான்
நல்மகளை பெற்ற அந்த தகப்பனும் செய்தி அறிந்து அக்குழந்தைகளை காத்திருக்கின்றான்
இரு ஆண்களின் தியாக மனதை இங்கே புரிந்துகொள்ள நமக்கு வாய்ப்பு, எல்லாம் காலமாற்றம்
இந்நிலையில் தன் கடைசி குழந்தையினை நானே வளர்ப்பேன் என சொல்லி குழந்தையினை தூக்கி வந்திருக்கின்றாள் அந்த நவீன புரட்சி பெண், வரும் வழியில் காதலன் வீட்டுக்கு சென்றிருகின்றாள்
அங்கு காதலை இருவரும் நிரூபித்துகொண்டிருந்த வேளையில் குழந்தை அழுதிருக்கின்றது, அந்த புனிதமான பூஜையினை கெடுத்த குழந்தையினை அவள் அடித்தே கொன்றிருக்கின்றாள்
உலக சுற்றுசூழலும் மழையும் பனியும் கடல்மட்டமும் அல்ல பெண்கள் மனமும் கொடூரமாக மாறிகொண்டிருப்பது கடும் சோகம்
இன்னொரு சம்பவத்தில் அதே நெல்லையில் தாயினை அவளுக்கு நல்ல காதலனும் ஊருக்கு கள்ளகாதலுமானவவுடன் தன் வீட்டிலே பூட்டி வைத்து ஊரை கூட்டியிருக்கின்றாள் பருவ மகள்.
தன் ஆசைகாதலுடனுன் வெளிவந்த தாய் அவனுடனே வாழ்வேன் என சென்றும் விட்டாள். அவளுக்கு வயது 43 அவனுக்கு வயது 28
நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே தெரியவில்லை, பாச பந்தங்கள் எல்லாம் அறுபட்டு விலங்குகளை விட மகா மோசமான நிலைக்கு சமூகம் சென்றுகொண்டிருக்கின்றது
வற்றாத தாமிரபரணிக்கு இருக்கும் ஈரமும் கருணையும் கூட நெல்லையின் இந்த மகளிருக்கு இல்லை என்பதுதான் கடும் சோகம்
காக்கை கூட குயில் குஞ்சினை வேறுபாடின்றி வளர்க்கும், சில விலங்குகள் கூட இன்னொரு விலங்கின் குட்டி என்றால் தடவி கொடுக்கும்
காதல் என்பது அவரவர் விருப்பமாக இருந்து தொலையட்டும் ஆனால் அதில் மூழ்கி பெற்ற குழந்தையினை கொல்ல அல்லது கைவிடும் பொறுப்பற்ற தாய்மாரை தண்டிக்க கடும் சட்டபிரிவும் அதைபற்றிய விழிப்புணர்வும் மிக மிக அவசியம்