பொறுப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேண்டும்
அரசு செய்யும் தவறுகளால் மக்கள் பாதிக்கபடுகின்றார்கள் என பொங்கும் பயல் எவனையும் நடுகாட்டில் ஒரு குடும்பம் செய்த தவறால் மொத்த அரசு எந்திரமும் 4 நாட்களாக முடங்கி கிடக்கின்றது, பல நூறு பேர் உணவு உறக்கம் இல்லாமல் பாதிக்கபட்டார்கள் என சொல்ல காணவே இல்லை
பொறுப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேண்டும்
இப்பொழுதும் பாருங்கள் மூடபடாத ஆழ்குழாய் கிணறுகளை அரசு நடவடிக்கை எடுத்து மூடவேண்டுமாம், பலத்த கோரிக்கைகள்
ஏன் பல ஆயிரம் செல்வழித்து தோண்டியவன் எங்கே போனான்? மூட வேண்டியது அவனா இல்லை அரசா?
உங்கள் ஆவேசத்தில் விவசாய கிணறுகளையும் நீர் ஆதார கிணறுகளையும் மூடிவிடாதீர்கள்..