போங்கடா டேய்..இதையும் எழுதுங்கடா

அண்ணே , என்ன இருந்தாலும் நேத்தைக்கு அப்படி எழுதிருக்க கூடாது, எங்களுக்கெல்லாம் வருத்தமா போச்சி

எதுக்குடா?

நீங்க சொல்ற நல்ல விஷயத்தை எல்லாம் பரப்புவோம் அது சோஷியல் மீடியா, யூ டியூப்ன்னு பிச்சிக்கும், உங்க மேல அவ்வளவு மரியாதை இருந்து, அது நேத்தோட போச்சி

ஒஹோ

இனி நீங்க நல்லபடியா எழுதினாதான் வரும், தயவுசெய்து திருந்துங்க‌

அதெல்லாம் இருக்கட்டும் முன்னாடி எழுதினதெல்லாம் என்ன செஞ்சீங்க‌

அதாண்ணே ஊரெல்லாம் பரப்பினோம்

ஆமாண்டா எவன் எவன் பெயரிலோ பரப்புனீங்க, ஒரு வார்த்தை கேட்டீங்களா? இல்லை பெயரைத்தான் சொன்னீங்களாடா?

ஹ்ஹீஹ்ஹி அண்ணே இது கடமை இதுல நாம பலன் எதிர்பார்க்க கூடாது

அந்த கடமைய நேத்தும் செஞ்சிருக்கணும், இதை எல்லாம் ஏண்டா பரப்பல?

அண்ணே எங்களுக்கு தேவை எதுவோ அததான் பரப்புவோம், எங்களுக்கு எது தேவையோ அதத்தான் நீங்க எழுதணும்

ஓடிரு , நாம எழுதணுமாம் அவனுக போக்குல எங்கேயோ பரப்பி எவன் பெயரிலோ மாத்தி நம்மகிட்டயே காட்டுவானுகளாம்

தினமும் பால் ஊற்றி வைத்தால் யாருக்கும் தெரியாமல் எடுத்துகொண்டு ஓடுவது , ஒருநாள் பால்டாயில் ஊற்றினால்தான்டா உங்களுக்கு புரியும்.

போங்கடா டேய்..இதையும் எழுதுங்கடா .