போதும் நிறுத்துங்கள்

போதும் நிறுத்துங்கள்

நானே கருப்பு துண்டில் இருந்து மஞ்சள் துண்டுக்கு வந்தவன், ஏன் மஞ்சளுக்கு வந்தேன்? பெரியார் மஞ்சள் மண்டி வைத்திருந்தார் என்பதலா? இல்லை

மஞ்சளும் காவியுமே ஞானிகளின் அடையாள‌ம், பழந்தமிழரின் செழுமையின் சின்னம்,

மஞ்சளுக்கு மாறியபின்பே 15 ஆண்டுகள் மத்திய அரசை ஆட்டிவைத்தேன், தீரா திரவியம் சேர்த்து வைத்தேன்

நான் அரசியல் ஞானி அதனால் மஞ்சள் துண்டுக்கு மாறினேன், ஞானிகளுக்கெல்லாம் ஞானியான வள்ளுவனுக்கு காவி உடை உடுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்

அறிவாலயத்துக்கு என்ன கருப்பு பெயின்ட் அடித்தோமா? அடித்திருந்தால் மனிதன் பார்த்திருக்க முடியுமா?

திமுக கொடியிலே பாதி செஞ்சிவப்பு குங்கும கலர்தானே? உதய சூரியனே காவியும் குங்கும நிறம்தானே?

ஆக என்னையும் இழுத்து தெருவில் விட்டுவிட்டான் நான் பெற்ற பிரகலாதன்..அழகிரிக்கு சுக்ரீவன்,.கனிமொழிக்கு கும்பகர்ணன்”