போனஸ் பதிவுகள் …..

Image may contain: 1 person, close-up

நந்தினி சீரியலில் குஷ்பூ பேயாக வருகின்றார், இனி பேய்களும் ரசிகர் மன்றம் தொடங்கும் என முன்பே சொல்லியிருந்தோம்

சின்னதம்பியிலும் அவர் நந்தினி, இந்த அழகான பேய் சீரியலிலும் அவர் நந்தினி

ஆக வருங்காலத்தில் நமது சங்கம் பெரும் ஆலமரமாக வளரும்பொழுது ஒரு பிரிவிக்கு “நந்தினி பிரிவு” என பெயரிட்டே தீரவேண்டும் என்பது சங்க முடிவு..


டெல்லிக்கு செல்கின்றார் எடப்பாடி மோடியினை சந்திக்க திட்டம்

கடந்தவாரம்தான் பன்னீர்செல்வம் மோடியினை சந்தித்தது குறிப்பிடதக்கது

பரமானந்த குருவின் கதையில் அவரின் சீடர்கள் ஆளுக்கொரு காலைபிடித்து குருவினை இழுத்துபோட்ட கதை நினைவுக்கு வருகின்றது

மோடியின் நிலையும், இவர்கள் அட்டகாசமும் அந்த கதையினைத்தான் நினைவுபடுத்துகின்றன‌