போரிஸ் ஜாண்சன் பிரிட்டன் பிரதமராகிவிட்டார்
டிரம்ப் போன்றே அழிச்சாட்டியம் பிடித்தவரான போரிஸ் ஜாண்சன் பிரிட்டன் பிரதமராகிவிட்டார்
பிரிட்டன் இப்பொழுது சிக்கலில் இருக்கும் நாடு, ஐரோப்பிய யூனியனில் இருக்க முடியவில்லை இருந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் போல எல்லா பயலும் உள்ளே ஓடிவந்துவிடுகின்றான்
இதனால் வெளி செல்லவும் முடியவில்லை அதன் பின் நிறைய ஏற்றுமதி இறக்குமதி சிக்கல் வரும், நாடு திணறும்
ஒருமாதிரி இக்கட்டான நிலையில் இரு பிரதமர்கள் அடித்து புரண்டு ஓடிவிட்டார்கள், இப்பொழுது ஜாண்சன் பெரும்பான்மையுடன் மீண்டும் அமர்கின்றார்
அன்னார் பிரிட்டன் நாகரீகத்தை மீறி டீப்பாயில் ரவுடி ஸ்டைலில் கால் வைத்து “என்னா” என பத்திரிகையாளரை கேட்டது, அது போக நேற்று சிவகுமார் பாணியில் செல்போனை பிடுங்கியது என ஏக கலாட்டா செய்பவர்
சவுடால்களை அடிப்பதில் டிரம்புக்கே குருநாதர்
ஜாண்சன் மறுபடியும் பிரதமராகி இருப்பதால் அதுவும் தனிபெரும்பான்மையில் பிரதமராகியிருப்பதால் இனி காமெடிக்கு பஞ்சம் இருக்காது
பிரிட்டன் இந்தியர் வாக்குக்காக இந்து ஆலயம் சென்று வணங்கிய நல்ல குணமும் அவரிடம் உண்டு என்பது இன்னொரு முகம்
இரண்டாம் டிரம்ப் இனி என்ன அதிரடி எல்லாம் காட்டபோகின்றாரோ பார்க்கலாம்