போலந்து நாடு தன் மாபெரும் பொக்கிஷ்த்தை மீட்டிருக்கின்றது

போலந்து நாடு தன் மாபெரும் பொக்கிஷ்த்தை மீட்டிருக்கின்றது

ஆம், இரண்டாம் உலகபோரில் ஜெர்மனால் விழுங்கபட்ட முதல் நாடு போலந்து. எனினும் முன் கூட்டியே தன் பணத்தை தங்கமாக மாற்றி பிரிட்டனுக்கு அனுப்பிவிட்டது

மேற்கொண்டு படிக்கும் முன் அருகில் ஒரு மருத்துவரை வைத்துகொள்வது நல்லது முடியாவிட்டால் ஒரு சோடா பாட்டிலாவது இருக்கட்டும்

எவ்வளவு தங்கம் தெரியுமா? அதிகம் அல்ல 100 டன்கள் தான். ஆம் நூறே நூறு டன்கள் மட்டுமே

ஒரு டன் என்றால் ஆயிரம் கிலோ எனில் இந்த மதிப்பினை நீங்களே கணக்கிடுங்கள், ஒரு கிராம் தங்கத்தின் விலையினை வைத்து மதிப்பினை கணக்கிடுங்கள்

பிரிட்டன் திருப்பி கொடுத்த அந்த தங்கம் பகுதி பகுதியாக போலந்துக்குள் செல்கின்றது, புதையலை மீட்டெடுத்த திருப்தியில் இருக்கின்றது போலந்து

இன்று ஹிட்லர் இருந்து இந்தியாமேல் படையெடுத்தால் நம் அரசியல்வாதிகள் சொத்தும் இதே போல் கட்டி தங்கமாக பிரிட்டனுக்கு கடத்தபடும், அது 100 டன் எல்லாம் இருக்காது மாறாக பல்லாயிரம் கோடி டன்னாக இருக்கும், அதை சேர்த்துவைக்கவே பிரிட்டனில் இடம் இருக்காது என்பது வேறுவிஷயம்