போலி திராவிட அரசியலுக்கான வெற்றி
வைகோவினை பலர் கலாய்க்கின்றார்கள் அதில் பெரியார் திமுக திராவிட கோஷ்டிகளும் இருக்கின்றன
வைகோ ஒரு மாதிரியானவர் என்பதில் சந்தேகமில்லை, அரசியலில் அவர் தோற்றிருக்கலாம்
ஆனால் திராவிட கொள்கை எப்படிபட்ட வெறிபிடித்த ஒருவனை உருவாக்கும் என்றால் சந்தேகமின்றி காட்டகூடிய நபர் வைகோ
அண்ணா, கலைஞர் எல்லாம் அரசியல்வாதிகள், நாளை ஓணானுக்கு வாக்கு என்றால் கூட “உன் பனைமரம், உன் கால் உன் வால் உன் உரிமை” என பாயிரம் பாட கிளம்புவார்கள்
அரசியல் என்பது வேறு திமுக செய்வது அதுதான், தேவைக்கேற்ற வளைவது அல்லது தாளத்துக்கு ஏற்ப ஆடுவது
ஆனால் வைகோ அப்படி அல்ல, அவரின் இந்திய வெறுப்பும் எதிர்ப்பும் சுத்தமான திராவிட கொள்கையினால் உருவானது
அவர் அப்படித்தான் இருந்தார், இன்னும் இருப்பார்
ஒரே ஒரு வெறிபிடித்த உண்மையான திராவிடனைத்தான் உருவாக்கியிருக்கின்றது பெரியார் கோஷ்டி
நல்ல வேளையாக வைகோவின் அரசியல் படுவீழ்ச்சியினை கண்டது, இல்லாவிட்டால் விளைவுகள் கடும் பயங்கரமானதாய் இருந்திருக்கும்
புராணங்களில் பொல்லா வரம் பெற்றவர்கள் பலம் பெற்றவர்கள் ஒருவர்தான் இருப்பார்கள், அதனால்தான் அவர்களை ஒழிப்பது அவதாரங்களுக்கு எளிதாயிற்று
அப்படி ஒரே ஒரு வைகோ சுத்தமான திராவிட பெரியாரின் கொள்கையில் உதித்ததால் தமிழ்நாட்டு நிலமை இந்த அளவாவது இருக்கின்றது
உண்மை திராவிட கொள்கைக்கான தோல்வியும், போலி திராவிட அரசியலுக்கான வெற்றியும் என்றால் என்ன என்பதற்கு வைகோவினை நோக்கி தாரளமாக கையினை காட்டலாம்