“போலி முகமூடிகளையும், பொய்யான பிம்பங்களையும் கிழித்தெறிவது தவறென்றால் அந்த தவறை ஆயிரம் முறை செய்வோம்”
கலைஞரையும் காங்கிரசையும் மனம்போன போக்கில் இல்லாத பொய்களை சொல்லி விமர்சிப்பார்களாம்
ஆனால் புலிகள் பற்றிய இன்னொரு முகத்தினையும், பிரபாகரனையும் பற்றி சொல்லிவிட கூடாதாம்
ஒரு பெரும் நாட்டினை எதிரியாக பாவித்து, அந்நாடு உருவாக்கிய சக போராளிகளை எல்லாம் அழித்து, அந்நாட்டிற்கே தன் நாட்டு மக்களை அகதிகளாக அனுப்பிவிட்டு, அந்நாட்டின் 1500 வீரர்களை கொன்று,
உச்சமாக அந்நாட்டு பிரதமரையே கொன்றுவிட்டு, கேமரா முன்னால் இந்தியாவிற்கு நேசகரம் நீட்டுகின்றோம் என சிரித்துகொண்டே சொன்ன பிரபாகரனுக்கு, இன்னமும் தன்னை பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைக்கும் என நம்பிய பிரபாகரனுக்கு,
இந்தியா முன்னால் நாம் ஈழம் அமைத்து அதிபராவோம் என கொஞ்சமும் சந்தேகமின்றி நம்பிய பிரபாகரனுக்கு
இவ்வளவு நடந்தும் இந்தியா
முள்ளிவாய்க்காலில் வந்து காக்கும் என நம்பிய அவருக்கு அறிவு இருந்தால்தானே இவர்களுக்கும் இருக்கும்?
அவர்கள் பேசிகொண்டே இருப்பார்களாம் கலைஞர் தரப்பு கேட்டுகொண்டே இருக்கவேண்டுமாம்
ஆனால் நாம் பேசினால் அவர்களுக்கு கடும் கோபமும் ஆக்ரோஷமும் வருமாம்
புலிகளின் இந்தியா பற்றிய எண்ணம் எப்படி இருந்தது?
“இந்தியா எங்களை மட்டும் ஆதரிக்கவேண்டும், வேறு யார் பக்கமும் செல்ல கூடாது
நாங்கள் விசா இன்றி எப்பொழுதும் இந்தியா வருவோம், தமிழகத்தில் யாரையும் கொல்வோம் இந்தியா கண்டுகொள்ள கூடாது
இந்தியாவின் தமிழகத்து ஈழ அகதிகள் எல்லாம் இந்தியாபாடு, எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை
இது தமிழருக்கான போராட்டம், ஆனால் மலையக தமிழர் எனும் தமிழக வம்சம் பற்றி எமக்கு கவலை இல்லை
நாங்கள் போராடுவோம், எங்களுக்கு கஷ்டம் என்றால் இந்தியா வந்து காப்பாற்றவேண்டும், மற்றபடி நாங்கள் ஜெயித்தால் அது வீரம்
சுருக்கமாக சொன்னால் எங்கள் வழிக்கு இந்தியா வரவே கூடாது, முடிந்தால் எங்களை சரிக்கு சமமாக நடத்தலாம்..ஆனால் எங்களுக்கு அவசியம் என்றால் இந்தியா வந்தே தீரவேண்டும்
சிங்களனை அடிப்போம் அவன் எம் மக்களை அடிப்பான், அப்பொழுது இந்தியா வரவேண்டும் காரணம் மக்கள் நடுவில் நாங்கள் இருப்போம்.
நாங்கள் செய்யும் எந்த கொலைகளையும் இந்தியா கண்டுகொள்ள கூடாது, நாங்கள் யாரையும் கொல்வோம், எப்பொழுதும் கொல்வோம்
அதற்காக கலைஞர் போன்றவர்கள் ஆட்சியிழந்தார்கள் என்றால் அது எங்களுக்கு கவலையே அல்ல, அவர் ஆட்சி எப்படி போனால் என்ன? நாங்கள் யாரையும் தமிழகத்தில் கொல்வோம், எங்களுக்கு தனி சலுகை வேண்டும்
ஆனால் ஈழத்தில் சிங்களன் எங்களை கொல்லவந்தால் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் , அப்படியும் முடியவில்லையென்றால் தூக்கில் தொங்கி எங்களை காப்பாற்ற வேண்டும்
பிரபாகரனின் உடன்பிறந்த அண்ணன் , அக்கா எல்லோரும் கனடாவிலும் , லண்டனிலும் இருப்பார்கள், ஆனால் பிரபாகரனின் அன்னையினை கலைஞர்தான் சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டும்
சுருக்கமாக சொன்னால், இந்தியா எமக்கு வேலைக்காரன் போல இருக்கவேண்டும், இல்லாவிட்டால் ஏற்றுகொள்ள மாட்டோம்
கலைஞர் உட்பட எல்லா தமிழக அரசியல்வாதிகளும் எங்களுக்கு சொம்பு தூக்க வேண்டும்
இதுவே எங்கள் கட்டளை , எங்கள் கட்டளையே சாசனம், இந்த சாசனமே ஈழபோராட்டம்”
இந்த கொள்கையுடன் இருந்த ஒரு கும்பலுக்கு இந்தியாவின் தமிழக முதல்வர் என்ன செய்துவிட முடியும்??
இந்த குணத்துடன் தான் நார்வே தூதுகுழுவிடமும் புலிகள் இருந்தார்கள், அதுதான் அவர்களை உலகிலிருந்தே தனிமைபடுத்திற்று
“பிரபாகரன் எதனையும் யோசிக்க கூட விரும்பவில்லை, இந்த மனிதரிடம் என்ன பேச? உங்களுக்கு தெரிந்த பாஷையில் பேசுங்கள்..” என சிங்களனிடம் சொல்லிவிட்டு சென்றது நார்வே
எல்லோரையும் பகைத்த புலிகள், கேட்க ஆளின்றி மறைந்தார்கள்
உண்மை இப்படி இருக்க, கலைஞரை அவர்கள் விமர்சிப்பார்களாம், படு கேவலமாக பேசுவார்களாம்
ஆனால் இந்த ரத்த புனிதர்களைபற்றி யாரும் எதுவும் சொல்லிவிட கூடாதாம், குற்றமாம்
கலைஞர் சொன்ன சொல்தான் “போலி முகமூடிகளையும், பொய்யான பிம்பங்களையும் கிழித்தெறிவது தவறென்றால் அந்த தவறை ஆயிரம் முறை செய்வோம்”