போலோ கோஷ்டிகளால் வந்தது

அதுவரை வெடிபொருளை வைத்து வானவேடிக்கை, பட்டாசு என மகிழ்ச்சியாக இருந்தது சீன சமூகம்

ஆம் வெடிபொருளை அவர்கள்தான் கண்டறிந்தார்கள், அதை வைத்து பண்டிகை அரசவிழா என கொண்டாடுவார்கள், மற்றபடி யுத்தம் என்றால் கோடாரி, வாள் , ஈட்டி சகிதம் கிளம்புவார்கள்

மங்கோலிய பேரரசு போலந்துவரை பரவியதாலும் ஏற்கனவே பட்டுசாலை இருந்ததாலும் சீன ஐரோப்பிய போக்குவரத்து எளிதானது, கடல் வழி பாதையும் உண்டு, கடல்வழி பாதை என்றால் கப்பல் அரேபியா வரை வரும், அரேபியா சந்தையானது

இப்படிபட்ட காலத்தில்தான் வியாபாரி மார்க்கோபோலோ குடும்பம் சீனாவுக்கு சென்றது அங்கு செங்கிஸ்கானின் பேரன் குபலாய்கான் ஆண்டுகொண்டிருந்தான், அவனுக்கு பிறந்த நாளோ இல்லை சின்ன அரண்மனைக்கு மஞ்சள் பூசுதலோ எதுவுமோ நடந்தபொழுது வெடியாக கொழுத்தினார்கள்

இதை வைத்து ஆயுதம் செய்தால் என்ன என சிந்தித்தான் போலோ, அட பைத்தியகாரா முடிந்தால் செய்துபார் என சொல்லிவிட்டார் ஹூப்ளேகான்

எதையோ செய்து ஒருவழியாக வெடிசக்தியினை பொருளை தூக்கி எறியும் சக்தியாக மாற்றியது போலோ கோஷ்டி

அப்பொழுது ஹூப்ளேகானுக்கும் பக்கத்து நாட்டு சிறிய படைக்கும் தகறாறு, அவர்கள் வில் அம்பு ஈட்டி என எறிய போலோ கொடுத்த ஆயுதத்தை சோதித்தான் ஹூப்ளேகான்,

அது அட்டகாசமாக கல் பெரும் குண்டுக்கல் எல்லாம் தூக்கி எறிந்தது, ஹூப்ளேகான் மகிழ்ந்தார்

பின் அதை மாற்றம் செய்து பீரங்கி ஆக்கினார்கள், அக்கால யுத்தபடி பலமானது கோட்டை , அதை தகர்க்கமுடியாது கோட்டைக்குள் ராஜா படைகளோடு இருப்பார் , கோட்டையே வெற்றி தோல்வியினை தீர்மானிக்கும்

கோட்டை உடைக்க பீரங்கிகள் பயன்பட்டன, அது ஆங்காங்கே பரவியது, எப்படியோ ஆப்கன் பாபரிடமும் கிடைத்தது

அன்றைய பெரும் நவீன ஆயுதமான பீரங்கியுடன் இந்தியா வந்தபாபர் லோடி என்பவனை தூக்கிபோட்டு மிதித்து இங்கு அரசை நிறுவினான்

அப்படியே மசூதியும் கட்டினான்

நாளை பாபர் மசூதி நினைவுநாள் என கிளம்புவார்கள், பொது அமைதி அச்சமாகும் காவலருக்கு தூக்கம் கெடும்

நாடே தலைகீழ் பாதுகாப்பிலும் பரபரப்பிலும் இருக்கும்

எல்லாம் யாரால் வந்தது என்றால், சீனாவுக்கு போய் வியாபாரம் பார்க்காமல் வெடிமருந்தை யுத்தகளத்துக்கு கொண்டுவந்த போலோ கோஷ்டிகளால் வந்தது

அந்த போலோக்கள் சீனாவுக்கு

செல்லாமலே இருந்திருக்கலாம்..