ப.சிதம்பரத்துக்கு இது போதாத காலம்
இளவயதில் இருந்தே மிக கவுரமாகவும் பெரும் பிம்பமாகவும் வலம் வந்த ப.சிதம்பரத்துக்கு இது போதாத காலம்
உறுதியாக சொல்லலாம் அவரின் சீமந்த புத்திரன் தேடிகொடுத்த சிக்கல் இது
கலைஞருக்கு கனிமொழி போல சிதம்பரத்துக்கு கார்த்தி வந்து சிக்கலில் தள்ளியாயிற்று.
கலைஞர் பெரியாருடன் இருந்த காலத்தில் இருந்தே வழக்குகளில் தப்புவது எப்படி என்பதை பெரும் வித்தையாக கற்றிருந்தவர் என்பதால் எப்படியோ மகளை காப்பாற்றி கொண்டுவந்துவிட்டார்
ஆனால் ப.சிக்கு அந்த அனுபவமில்லை என்பதுதான் சோகம்
நீண்டநாள் ஓடி ஓளியமுடியாது, சட்ட ஓட்டைகளில் தப்பவும் முடியாது, சிதம்பரம் வருவதை எதிர்கொள்வது நல்லது
என்ன வந்துவிடும்?
பாஜக பழிவாங்கும் அரசியல் செய்கின்றது, காங்கிரஸின் மூத்த தலைவர் என்பதற்காக என்னை பழிவாங்குகின்றது, 73 வயதில் அய்யகோ.. என கண்ணை கசக்கினால் தீர்ந்தது விஷயம்
ஆனால் ப.சி அந்த பழிக்கும் இழிநிலைக்கும் அஞ்சுகின்றார், என்ன இருந்தாலும் நாட்டுகோட்டை செட்டி வம்சம் அல்லவா?
எல்லா மனிதனுக்கும் சோதனைகாலம் நிச்சயம் வரும், அதை எதிர்கொள்ளாதவன் எவனுமில்லை
ப,சி என்பவருக்கு இப்பொழுது வந்திருகின்றது
நேற்று அவர் வீட்டில் ரெய்டு என்றார்கள் பின் அதுபற்றி செய்தி இல்லை
ரெய்டு எப்பொழுது நடத்துவார்கள், பெரும் பொருள் இருந்தால் நடத்துவார்கள்
பெரும் பொருள் என்றால் பாரம். இதைத்தான் பழனிச்சாமி சிதம்பரம் பூமிக்கு பாரம், பாரம் என திரும்ப திரும்ப சொல்லியிருக்கின்றார்
ப.சி மேல் அவருக்கும் அனுதாபம் இருந்திருக்கின்றது.
பழனிச்சாமி கொடுத்த அட்டகாசமான குறிப்பினை பிடிக்க தவறிவிட்டார் சிதம்பரம், இனியாவது அவர் அடிக்கடி பழனிச்சாமியினை கவனிக்கட்டும்