ப.சிதம்பரம் நிலை குறித்து தமிழக காங்கிரசாரின் கவலை எப்படி இருக்கும் தெரியுமா?
ப.சிதம்பரம் நிலை குறித்து தமிழக காங்கிரசாரின் கவலை எப்படி இருக்கும் தெரியுமா?
வேறு எப்படியும் இருக்காது, இப்படித்தான் இருக்கும்
சிதம்பரமே சிக்கலில் இருக்கும் பொழுது அவரின் அடியாள் கே.எஸ் அழகிரி எப்படி பதவியில் நீட்டிக்கலாம்? அவரை விரட்டிவிட்டு அடுத்து யாரை வைக்கலாம் இல்லை நாமே அமர்ந்தால் என்ன?
பிரியங்காவும் ராகுலும் ப.சிக்கு ஆதரவு தெரிவித்துகொண்டிருக்கும் பொழுதே, “தமிழகத்தில் ப.சி செல்வாக்கு சரிந்தது அதனால் கே.எஸ் அழகிரி மேல் முட்டை தக்காளி வீசபடும் ஆபத்து உண்டு, கட்சி மரியாதை காக்க அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு இவரை நியமிக்கவும், இவ்வளவுக்கும் நான் அவர் அணி அல்லவே அல்ல, காங்கிரஸின் உண்மை தொண்டன்” என பேக்ஸ் குவிந்து கொண்டே இருக்கும்
தமிழக காங்கிரஸ் அப்படித்தான், அது தமாஷான காங்கிரஸ்
நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ, இப்பொழுதே ஆங்காங்கு கூடி, ஏன் சத்திய மூர்த்திபவனின் பின்னாலே கூடி இப்படித்தான் பேசிகொண்டிருப்பார்கள்