மகராஷ்டிர அரசியல் நெருக்கடி வேறு பாதைக்கு செல்கின்றது

மகராஷ்டிர அரசியல் நெருக்கடி வேறு பாதைக்கு செல்கின்றது

சிவசேனாவினை தாங்கிபிடிக்கும் அவசியம் தனக்கு இல்லை என கருதுகின்றது பாஜக, அவர்களாக வந்து நம்மை ஆதரிக்கட்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கும் வேறுவழியில்லை என கணகிடுகின்றது

சரத்பவாரை முதல்வராக்க சோனியா விரும்பவில்லை, பவார் முதல்வராக நாம் கட்சி நடத்துகின்றோமா என்ன? என்பது அவர் கணக்கு

இப்படி தேசிய கட்சிகள் இரண்டும் ஒதுங்கி கொள்ள மாநில கட்சிகளான சிவசேனாவும், சரத்பவார் கட்சியும் ஒருவர் முதுகில் ஒருவர் ஏற ஏதோ பேசி பார்க்கின்றனர்

போகிற போக்கில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தபடும் போல் தெரிகின்றது

“இதோ பார் சிவசேனா, ஒழுங்காக எங்களை ஆதரித்தால் நாங்கள் ஆள்வோம் நீ மரியாதையான கூட்டாளியாக இருக்கலாம். இல்லை ஜனாதிபதி ஆட்சி என நாங்களே ஆள்வோம் உனக்கு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும்

அடுத்த தேர்தல் வந்தால் பாஜக அமோக வெற்றிபெறும் என்பது உனக்கு தெரியாததல்ல” என சொல்லிவிட்டு தன் போக்கில் கதவை அடைத்துவிட்டு அமர்ந்திருக்கின்றது பாஜக..