மகளிர் தினத்தை தன் மய்யத்து சார்பாக கொண்டாடுவாரம் கமலஹாசன்

Image may contain: 1 person

மகளிர் தினத்தை தன் மய்யத்து சார்பாக கொண்டாடுவாரம் கமலஹாசன், அன்று அவர் கூட்டம் போட்டு பேசுவாராம் இதற்கான ஏற்பாட்டை மய்யத்தின் மகளிரான ஸ்ரீப்ரியா, கமலா நாசர் ஆகியோர் “தமிழக பெண்களே கமலஹாசன் அழைக்கின்றார்” என கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்தாயிற்று

மய்யம் கட்சி தொடக்க விழாவில் “இவன் யாரென்று தெரிகின்றதா?” என பாடல் ஒலிக்க கமல் மேடை ஏறினாராம்

இப்பொழுது மகளிர் தினத்தில் கமலஹாசனின் “மன்மத லீலை”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற படம் ஒளிபரப்பபடுமா?

சில்க் ஸ்மிதாவுடன் ஆடிய “பொன்மேனி உருகுதே” போன்ற பாடல்கள் அரங்கேறுமா ?

கமல் மேடை ஏறும்பொழுது “குத்துங்க எசமான் குத்துங்க. இந்த பொம்பிளைங்களே இப்படித்தான் , பேய்ங்க .. பிசாசுங்க..ராட்சஸிங்க” எனும் வசனம் ஒலித்தால் எப்படி இருக்கும்?

முத்தாய்ப்பாக பெண்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு பற்றி பெண்கள் கேள்வி கேட்டால் கமல் பதில் சொல்வாராம்

என்னது கமல் பதில் சொல்வாரா? பெண்களின் உதடு பாதுகாப்பு கூட அவருக்கு சரியாக தெரியாதே?

பெண்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு எல்லாம் பெண்கள் கேட்டு வாணிகணபதி, சரிகா, கவுதமி போன்றோர் பதில் சொன்னால்தான் சரியாக இருக்கும்.

ஆலோசனை சொல்லும் முழு தகுதி அவர்களுக்குத்தான் இருக்கின்றது