மகளுக்கு இப்பொழுது அபிமான ஸ்டார் ரஜினிதான்

மகளுக்கு இப்பொழுதெல்லாம் ரஜினி படம் பிடிகின்றது, குழந்தைகள் அவரை ரசிப்பது ஆச்சரியமல்ல, அவரை எல்லா குழந்தைகளுக்கும் நிரம்ப பிடிக்கின்றது , இவ்வளவிற்கும் அக்கால படங்களில் அவர் கூலிங்கிளாஸ் எல்லாம் அணிவதே இல்லை
அதனால் அந்த கண்கள் அழகாக தெரிகின்றன, அதில் ஒரு ஈர்ப்பும், கெத்தும் அழகாக தெரிகின்றது
மகளுக்கு இப்பொழுது அபிமான ஸ்டார் ரஜினிதான், அதுவும் அன்னை ஒரு ஆலயம் போன்ற படங்கள் மிக பிடித்துவிட்டது
அக்கால ரஜினியிடம் ஒரு துடிப்பும், ஈர்ப்பும் இருக்கின்றது. அவரை கண்டாலே குழந்தைகள் முகம் பிரகாசமாகின்றன, கூடவே குட்டியானை வேறு
சும்மா சொல்ல கூடாது, அந்த குட்டியானையும் மிக பிரமாதமாக நடித்திருக்கின்றது
அடுத்த படமாக அன்புள்ள ரஜினிகாந்த் படம் பார்த்தாள், அவளுக்கு ஏனோ அந்தபடம் மிகவும் பிடித்துவிட்டது, குறிப்பாக குழந்தை மீனா
அந்த “ரோசி கேர்ள் அழககா இருக்காங்கப்பா..” என சொல்லிகொண்டே இருந்தாள், டோரா, அஞ்சலி பாப்பா போலவே இப்பொழுது ரோசி கேர்ளும் அவளுக்கு பிடித்துவிட்டது
இவள் என்ன அழகு, இந்த படத்தில் குஷ்பூவினை குழந்தையாக போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என சொல்ல வாய்வரை வார்த்தை வந்தது, சொன்னால் பிய்த்து விடுவார்கள்
குழந்தைகளில் எல்லோரும் அழகுதான், அதனால் மீனாவும் அழகான பொம்மையாக தெரிந்ததில் வியப்பில்லை
அதே படத்தில் இந்த “ஸ்பெஷல்” குழந்தையினை நடிக்க வைத்திருந்தால், உலக விருதுகளை எல்லாம் அப்படம் பெற்றிருக்கும்.
அக்கால டைரக்டர்களுக்கு இக்குழந்தை கிடைக்காமல் போனது அவர்களுக்கான துரதிருஷ்டம்..