மகாதீர் அவர்கள்

மலேஷியாவின் சிறப்புகளில் ஒன்று என வரலாறாகிவிட்டவர் மகாதீர் அவர்கள்

94 வயதிலும் நாட்டை நிர்வகிக்கின்றார், நடக்கின்றார் அவரே கார் செலுத்துகின்றார். தலையில் ஒரு முடி கூட உதிரவில்லை. இந்த வயதிலும் தெளிவிலும் மகா தெளிவு

நிச்சயம் அவர் ஒரு அதிசயம், அதைவிட அதிசயம் இன்றைய மலேசியாவினை அவர் உருவாக்கியிருக்கும் விதம்

இஸ்லாமிய நாடுகளில் மேற்கே துருக்கி அடுத்து மலேசியாவுக்கு தனி இடம் இருகின்றதென்றால் அதற்கு அவரும அவரின் உழைப்புமே காரணம்

அந்த மகாதீர் அவர்கள் ஒரு தொழிற்சாலை தொடர்பாக சர்ச்சைகுரிய சொல்லை சொல்லிவிட்டார் என்ற கருத்து வந்தது

மிக தேர்ந்த ராஜதந்திரியும் மிக பெரும் நிர்வாகியும் அதைவிட முக்கியமாக பல இனம் வாழும் நாட்டில் அப்படி ஒரு சர்ச்சை அவர்மேல் வந்தது

அவரும் எந்த இடத்தில் எந்த பொருள்வரும்படி சொன்னேன் என தெளிவாக விளக்கினார், அதில் சர்ச்சை ஏதுமில்லை. பிதாமகன் அதற்கான விளக்கத்தை கொடுத்தபின் ஒரு விஷயமுமில்லை சர்சையுமில்லை

மாமனிதன் சொல்லுக்கு மறுபேச்சில்லை என நாடும் ஏற்றுகொண்டது.

மலேசியாவே அமைதியான பின் பிபிசி விஷயத்தை சீண்டுகின்றது

பிபிசி என்பது ஒருவிதமான சீண்டிவிடும் மீடியா, ஒவ்வொரு நாட்டின் உள்ளேயும் புகுந்து சர்ச்சைகளை மோதலை செய்வது அதன் வழமை

அதுவும் பிபிசி தமிழின் அசைன்மென்டே உலகில் எங்கெல்லாம் தமிழர் உண்டோ அங்கெல்லாம் புகுந்து அழிச்சாட்டியம் செய்வது

இதை பல நாடுகளும் அரசுகளும் குறித்துகொண்டிருக்கின்றன‌

மகாதீர் ஒருமாதிரியான மேற்கத்திய அணுகுமுறை கொண்டவர் அதாவது அவர்கள் பிடியில் சிக்கமாட்டார், பெரும்பாலும் கிழக்கு நாடுகள் பக்கம் திரும்பும் பார்வை அவருடையது

இதனால்தான் 1998களில் இந்தோனேஷியா பொருளாதார நெருக்கடியினை சந்தித்தது போல 2008 நெருக்கடி போல மலேசியாவில் ஒன்றுமில்லை

சந்தேகமில்லை சிங்கப்பூரின் லீ குவான் யூவிக்கு நிகரானவர் மகாதீர்

ஆனால் லீ ஒரு லண்டன் அடிமை என்பதால் உலக பிரபலமானார் அவ்வளவுதான்

தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் சிக்கலை செய்யும் பிபிசி தமிழ் மலேசியாவிலும் தன் வாலை காட்டுகின்றது என்பதுதான் நிஜம்