மகாதீர் மலேய தமிழருக்கு துரோகம் இழைத்தார்

Image may contain: one or more people and people standing

“அண்ணே உங்களுக்கு தெரியாது, மகாதீர் மலேய தமிழருக்கு துரோகம் இழைத்தார்

அப்படியா?

ஆமாண்ணே, அங்க உள்ள இந்தியர் எல்லாம் நம் அருணா கயிற்று கொடி, ஈழ தமிழர் தொப்புள் கொடி. இங்கெல்லாம் தமிழருக்குரிய உரிமை மறுக்கபடுது

ஏன் அப்படி?

அண்ணே அவங்க அங்க பொறந்த தமிழர், எல்லா உரிமையும் கேட்க அவங்களுக்கு உரிமை இருக்கு, ஆனா மகாதீர் மலாய்மக்களுக்கு மட்டும்தான் நிறைய கொடுத்தாரு

ஓஓ மலேசிய தமிழன் அங்க பொறந்தவன், சரி இந்தியா பிராமின்?

அண்ணே அவங்க கைபர் போலன் வழியா வந்தவங்க

எப்போ?

3000 வருஷம் இருக்கலாம்

இவங்க போய்?

200 வருஷம் இருக்கும் ஆனா மலேசியர்கள், பிராமணன் வந்தேறி. நீங்க தமிழர் அதனால மகாதீரை கண்டிச்சி நீங்க எழுதணும்

ஒஹோ

சரி மலேசியாவில் இந்தியர் எத்தனை சதவீதம்?

தெரியாதுண்ணே?

சீனர்?

அவங்க அங்க உண்டாண்ணே? சும்மா கதைவிடாதீங்க‌

உண்டு, சொல்லு எத்தனை சதவீதம்?

சீனர் இருப்பதே தெரியல்ல, இதுல்ல நீங்க வேற‌

டேய் மலாய் மக்கள் 65% வருவார்கள், 20 % சீனர் வரலாம், இந்தியர் 13% இருக்கலாம் மீதி 2% வேறு இனம் இருக்கலாம், வேறு இனம் என்றால் ஐரோப்பிய வகையறா

அப்படியாண்ணே

சரி இதுல 100 வேலை, கல்வி வாய்ப்ப்ய் இருந்தா சதவீதபடி எப்படி கொடுப்பாங்க? சொல்லு

எண்ணணே நீங்க, திறமை இருக்கவனுக்கு கொடுக்கணும்

ஏன் நீங்க இந்தியாவில கொடுக்கல‌

அண்ணே இங்க ஒடுக்கபட்டவங்க இருக்காங்க , அவங்க மேல வரணுமுல்ல‌

மலாய் மக்களில் அடித்தட்டு இல்லையா? அவங்க மேல வரணும்னு அரசு ஆசைபடாதா?

இல்லண்ணே ஆனாலும் திறமை அடிப்படையில குடுக்கணும் அப்போதான் தமிழர் எங்கிருந்தாலும் வாழமுடியும்

ஏன் இந்தியாவில் கொடுத்தால் என்ன?

அண்ணே உங்களுக்கு வர்னாசிரமம் தெரியுமா? மனுநீதி தெரியுமா, பார்ப்பன கொடுமை தெரியுமா?

நீ என்ன அனுபவிச்சிருக்க சொல்லு?

ஹிஹிஹி பெரியவங்க சொன்னா சரியா இருக்கும்ணே

ஏண்டா, மலேசியனும் சிங்களனும் நீங்க 10% இருந்தாலும் அள்ளி கொடுக்கணும், ஆனா பிராமணன இங்க கைபர் போலன் கோஷ்டி, அது இதுண்ணு ஒண்ணும் கொடுக்கமாட்டீங்க‌

கொடுத்தா ஆபத்துண்ணே, வர்னாஸ்சிரமம் வளரும்ணே

அப்போ இங்க இட ஒதுக்கீடு இருக்கணும், திறமை எல்லாம் பார்க்க கூடாது

அது சமூக நீதிண்ணே

ஆணா மலேசியா, சிங்கப்பபூர் , இலங்கையில் எல்லாம் அள்ளி கொடுக்கணும்

அது தமிழர் உரிமைண்ணே

அடி நாயே செருப்பால‌

அடிங்கண்ணே அடிங்க, இப்படித்தான் பிராமணன் வீசிய செருப்பெல்லாம் வாங்கி பெரியார் உருவானாரு, நானும் அப்படி உருவாகி வரலாறுல நிக்க போறேன்

தெருவில நிப்ப ஓடிரு

ஆமாண்ணே சிலையா நிப்பேன்

டேய் நிக்காத ஓடிரு..”