மக்களின் மனநிலை ஆன்மீகம் நோக்கி ஓடுகின்றது
கடந்த 40 வருடங்களில் மிக பெரிய புரட்சியாளர் அத்தி வரதர் என்பவரே
மிகபெரும் கூட்டத்தை அவரே கூட்டியிருக்கின்றார், இவ்வளவுக்கும் அவர் பேசவுமில்லை எழுதவுமில்லை யாரையும் அழைக்கவுமில்லை
தமிழகம் ஆன்மீகம்பால் திரும்பியிருக்கின்றது, அது தியானமடங்களோ கிறிஸ்தவ ஆலயங்களோ இல்லை வேறு தலங்களோ நிரம்பி வழிகின்றது
மக்களின் மனநிலை ஆன்மீகம் நோக்கி ஓடுகின்றது, தேடி தேடி ஓடுகின்றார்கள்
அத்திவரதருக்கான வரவேற்பு அதனை தெளிவாக காட்டுகின்றது, மிகபெரிய ஆன்மீக எழுச்சி ஏற்பட்டிருப்பதை கண்கூடாக தெரிகின்றது
இது அரசும் ஆலய நிர்வாகமும் காவல்துறையும் எதிர்பாரா மாபெரும் கூட்டம் அவர்களே அலறிகிடகின்றார்கள்
அவர்களே எதிர்பாரா மாபெரும் கூட்டம் இது
ஆன்மீகம் பெருகுவது நல்ல விஷயம் என்றாலும் மக்களின் பாதுகாப்பினையும் அவர்கள் நல்ல விதமாக அத்திவரதரை தரிசிக்க முழு உதவினையும் இன்னும் தமிழக அரசு செய்தாக வேண்டும்