மக்களோடு களம் இறங்குங்கள்: ரஜினிக்கு சேரன் வேண்டுகோள்
மக்களோடு களம் இறங்குங்கள்: ரஜினிக்கு சேரன் வேண்டுகோள்

சமீபத்தில் தன் வழக்கமான 30 வருட புலம்பலை ரஜினி புலம்பியபின், அவருக்கு இப்படி திரைதுறையில் இருந்து பலர் ஆலோசனை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
தமிழக முதல்வர் பதவி நெடுங்காலத்திற்கு பின் இப்பொழுதுதான் பன்னீர், பழனிச்சாமி என திரையுலகம் சாராத இரு முதல்வர்களை கண்டிருக்கின்றது, அது இவர்களுக்கு பொறுக்கவில்லை
மறுபடியும் தமிழக முதல்வர் பதவியினை கைபற்ற அந்த துறை துடியாய் துடிக்கின்றது
ஆனால் அது ரஜினி எனும் உப்புகுதிரை அல்லது மண்குதிரையினை நம்பி இறங்குவதுதான் பரிதாப காமெடி
தன்னை நம்பிய சினிமா முதலாளிகளை தவிர யாருக்கும் என்றும் விசுவாசமாகவோ, நன்றியாகவோ ரஜினி இருந்ததே இல்லை, அவர்களை தவிர யாரை பற்றிய அக்கறையும் அவருக்கு இல்லை
வாட்டாள் நாகராஜ், கன்னடன் ராஜ்குமார் பற்றி சில கவலைகள் மட்டும் அவருக்கு முன்பு இருந்தது..
ரசிகர்கள் குடிக்க வேண்டாம், சிகரெட் வேண்டாம் என இப்பொழுது சொன்ன ரஜினிக்கு அன்று சொல்ல மனமில்லை, ஏன் என்றால் அந்த சுயநலம்தான் ரஜினி..
அறிவுள்ள ரசிகர்கள் என்றால் என்றோ அவர் சட்டையினை பிடித்து இழுத்து கேட்டிருப்பார்கள், எங்களை ஏமாற்றுகின்றாயா? டி.ஆர், கார்த்திக், சரத்குமார், பாக்யராஜ் அவ்வளவு ஏன் கருணாசுக்கு உள்ள தைரியம் கூட உங்களுக்கு இல்லையா என செவிட்டில் அடித்தார் போல கேட்டிருப்பார்கள்
ஆனால் அவர் ரசிகர்களிடம் எப்படி இப்படி எதிர்பார்க்கமுடியும்?
சரி ரசிகர்கள்தான் கேட்கவில்லை, இந்த திரையுலமாகவது கேட்கலாம் அல்லவா? சாமி நீர் அரசியலுக்கு வரவேண்டாம், ஆனால் விஜயகாந்த் போல சிலர் தடுமாறியபொழுது ஆதரவு அளித்திருக்கலாம் அல்லவா? என கேட்கலாம்
இவர்களே விஜயகாந்திற்கு மூச் விடவில்லை பின் எப்படி கேட்பார்கள்?
திரைதுறை முதல்வர் கண்டிப்பாக வேண்டும் என அந்த கூட்டம் தீவிரமாக சிந்திக்கின்றது, இதே சேரன் முன்பு தங்கர்பச்சானோடு சேர்ந்து ரஜினி கன்னடன் என சொன்னது குறிப்பிடதக்கது
இயக்குநர் சேரன் மறக்கலாம், சேரமன்னனின் தமிழ்நாடு மறக்காது
அப்படி திரையுலக முதல்வர்தான் வேண்டுமென்றால், ரஜினியினை ஆதரிப்பதற்கு பதிலாக, குஷ்பூவினை ஆதரிக்கலாம்
ரஜினியினை விட 100 மடங்கு உறுதியும், திறமையும் , தைரியமும் வாய்ந்தவர் குஷ்பூ
இதனை சொன்னால் நீ அவர் ரசிகன் அப்படித்தான் என்பார்கள், ஆனால் உண்மை அதுதான்,
குஷ்பூ தைரியமாக வந்தார், நின்றார் எல்லா எதிர்ப்புகளையும் தூள் தூளாக்கினார். எந்த மிரட்டலும் அவரை முடக்கவில்லை, முடக்க முடியவில்லை, அசால்ட்டாக அடித்து நொறுக்கி முன்னே செல்கின்றார்
இது உலகிற்கே தெரிந்தாலும் தமிழ் திரையுலகினருக்கு மட்டும் தெரியவே இல்லை… அல்லது தெரிந்தாலும் வெளிசொல்ல விருப்பமில்லை..
உறுதியில்லா ரஜினியினை விட , உறுதியான வைரம் போன்ற குஷ்பூ எவ்வளவோ மேல்..