மக்கள் பொறுப்பில்லாமல் இருக்கும் நாட்டில் அரசிடம் மட்டும் என்ன பொறுப்பினை எதிர்பார்க்க முடியும்?

தமிழகத்தில் மழைகாலம் வந்துவிட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது, இது நிச்சயம் சரியல்ல‌

மழையினை சமாளிக்கும் அளவு அடிப்படை வசதிகளை செய்யவேண்டியது அரசின் பொறுப்பு, நிச்சயம் வடிகால் மற்றும் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே செய்யவேண்டும்

மாறாக மழை வந்தால் வீட்டில் இருங்கள் விடுமுறை என்பது பொறுப்பற்ற கயமைதனம், இன்னொரு நாடென்றால் மக்கள் சும்மாவிட மாட்டார்கள்

மழை என்பது பெய்யத்தான் செய்யும், ஒரு புயல் மழை, சூறாவளி என்றாலாவது விடுமுறையினை ஏற்றுகொள்ளலாம், சாதாரண மழைக்கே விடுமுறை என்றால் அது அரசின் வீழ்ச்சியினை காட்டுகின்றது

ஒருவகையில் இது தேசிய அவமானம்

அவமானத்தை பற்றி கவலைபடும் நிலையிலா இருக்கின்றார்கள் அவர்கள்

இன்னொரு நாடென்றால் மக்கள் சும்மா விட மாட்டார்கள், இங்கு எல்லாமே சாத்தியம்

மக்கள் பொறுப்பில்லாமல் இருக்கும் நாட்டில் அரசிடம் மட்டும் என்ன பொறுப்பினை எதிர்பார்க்க முடியும்?