மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் : முதல்வர் பழனிச்சாமி

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் : முதல்வர் பழனிச்சாமி

முன்பும் ஜெயலலிதா இப்படித்தான் அறிவித்திருந்தார், அரசே ஏற்று நடத்திகொண்டிருப்பதாகத்தான் அறிவிக்கபட்டது, பின்பு எங்கிருந்தோ ஆறுமுகச்சாமிகள் உருவானார்கள்

ஆக அரசு நடத்துவதாக சத்தமாக அறிவித்துவிட்டு, சத்தமில்லாமல் தனியாருக்கு விடுவது அதிமுகவிற்கு புதிதல்ல‌

3 வருடத்தில் மணல் அள்ளுவது நிறுத்தபடுமாம், ஏன்? 3 நாளில் நிறுத்தமுடியாதா?

3 வருடத்திற்குள் அள்ளுவதற்கு மணலும் இருக்காது, அதிமுக ஆட்சியும் இருக்காது என்பதை தவிர எந்த அர்த்ததிலும் வராத அறிவிப்பு இது


நாட்டுகோழி முட்டை, லெக்கான் முட்டை, வாத்துமுட்டை, காடை முட்டை இந்த முட்டைகளில் எது சுவையானது என்ற போட்டி நடந்துகொண்டிருக்கின்றது

முதல் ரவுண்டில் லெக்கான் முட்டை அவுட் …..


33அடி பொதுபாதையினை ஆக்கிரமித்து கட்டபட இருந்த நடிகர் சங்க கட்டடத்திற்கு இடைக்கால தடை

அட பாவிகளா? சங்க கட்டிடத்தை கூட பொது இடத்தில்தான் கட்டவேண்டுமா? நீலாங்கரை ஏரியா போன்ற நடிகர்கள் ஏரியாவில் கட்ட கூடாதா?

கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களின் சங்கம் பொது இடத்தினை ஆக்கிரமித்துத்தான் கட்டபடுமாம், பொது இடத்தினை ஆக்கிரமிக்கத்தான் விஷாலுக்கு இவ்வளவு ஆர்வமா?

இந்த கொடுமைக்கு நிதிதிரட்ட கிரிக்கெட் ஆட்டம் வேறு ஆடினார்கள்…