மதன் ரவிசந்திரன் ஜெகத் கஸ்பர் பேட்டி

மதன் ரவிசந்திரன் ஜெகத் கஸ்பர் என்பவரை பேட்டி எடுத்தார் என்கின்றார்கள், நாம் இன்னும் பேட்டியினை பார்க்கவில்லை

ஏகபட்ட கேள்விகள் உண்டெனினும் ஜெகத் கஸ்பரை சில கேள்விகளில் மடக்கலாம்

உதாரணம் ஈழபோரையும் அதன் பிரிவினை கடுமையாக ஆதரிப்பவர் ஜெகத் கஸ்பர், கேட்டால் கொடுமை இன்னபிற என்பார்கள்

இயேசுவின் வாழ்வில் யூதேயா எனும் இஸ்ரேல் நாடு அடிமைபட்டு கிடந்தது , ரோமருக்கு எதிராக இன விடுதலை போர் நடந்தது, அதன் உச்சிதான் முள்ளிவாய்க்கால் போல இயேசுவுக்கு பின் ஜெருசலேம் ஆலயம் இடிக்கபட்டு யூதர் கொல்லபட்டது

ஆனால் இயேசு ஒரு இடத்திலு ரோமரை எதிர்க்கவில்லை, தயக்கமின்றி வரி கட்டினார் , சீசரை அரசனாக ஏற்றார்

பூலோக அரசு வேறு, வானலோல அரசு வேறு என்பதில் தெளிவாயிருந்தார், ஒரு இடத்திலும் இனவிடுதலை என்ற பேச்சே அவர் பேசவில்லை

ஆம் இயேசுவின் ஞானம் இனம் மதம் மொழிகளை கடந்து ஆன்மீகத்தை நோக்கியது, அந்த கிறிஸ்துவினை பின்பற்றும் ஜெகத் கஸ்பர் எனும் பாதிரி திராவிடம் தமிழ் எனும் குறுகிய வட்டத்தி சிக்குவது ஏன்?

சிக்கினால் அவன் எப்படி துறவியாகமுடியும்?

சரி இயேசு ரோமரின் சட்டத்தினை ஏற்று ரோம் சட்டதிட்டத்துக்கான குடிமகனாக வாழ்ந்தார், ஜெகத் கஸ்பர் ஏன் இந்திய சட்டதிட்டங்களை எதிர்க்கின்றார்

ரோமை சட்டபடி சாவை ஏற்ற இயேசு எங்கே? எல்லாவற்றுக்கும் போராட வரும் கஸ்பர் எங்கே?

ஒரு சில கேள்விகளிலே கஸ்பரை கிழித்து தொங்கவிட்டிருக்கலாம், இந்த ரவிசந்திரன் என்ன செய்தார் என தெரியவில்லை

எல்லா நாட்டிலும் கிறிஸ்தவ துறவிகள் இருகின்றார்கள், ஆனால் தமிழ்நாட்டு கிறிஸ்தவ துறவிகள் மட்டும் திராவிட அரசியலில் வந்து குதிக்கும் மர்மம் என்ன?