மதுரை அழகர் திருவிழா
மதுரை அழகர் திருவிழாவினை உற்று பார்க்கின்றேன்
ஊருக்கு அழகு ஆலயமும் ஆறும் என்பார்கள், மதுரை அதில் மிக மிக கொடுத்து வைத்த ஊர், அது இந்துக்களான விழா என சொல்லவே முடியாது அது மதுரையின் கலாச்சார விழா
அதை கொண்டாடும் காரணமும் கொண்டாட்டத்தை தொடங்குவதும் இந்துக்களுக்கானது என்றாலும் எல்லா மத மக்களும் அதில் தங்கள் வீட்டு திருவிழா போலவே கலந்து கொள்கின்றார்கள்
இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் அது தங்கள் வீட்டு திருவிழா என உற்சாகமாக பங்கெடுக்கின்றனர்
அதுவும் மதுரை மக்கள் மட்டுமல்ல கிட்டதட்ட 8 மாவட்ட மக்கள்
வேளாங்கண்ணி ஆலயத்தில் காணப்படும் அதே சிறப்பு மதுரை ஆலயதிருவிழாவிலும் அழகாக தெரிகின்றது
தமிழகத்து தனி சிறப்பு இதுதான், மத துவேஷங்களை இந்த பூமி ஒருகாலமும் செய்ததில்லை
இங்கு புத்தம் செழித்திருந்தது, சமணம் தளைத்திருந்தது, இஸ்லாம் வரும்பொழுதும் இந்த மண் வரவேற்று வாழவைத்தது
கிறிஸ்தவ துறவிகள் வந்தபொழுதும் இந்துமக்களும் மன்னனனும் வரவேற்றனர்
எல்லா மதமும் வாழட்டும் எல்லா தத்துவமும் செழிக்கட்டும் என்ற பெரும் மனப்பான்மையுடைய அற்புத பூமி இது
இந்த மாபெரும் ஒற்றுமை திருவிழாவினை பார்த்து கொண்டிருக்கும்பொழுதே மனம் வட இந்தியா பக்கம் செல்கின்றது
நம்புகின்றீர்களோ இல்லையோ அதுதான் உண்மை
வெள்ளையன் வரும்பொழுது அல்ல பாபர் வரும் முன்பே அயோத்தியில் இப்படித்தான் ஒற்றுமையாக இருந்திருக்கின்றார்கள்
பாபர் மசூதி கட்டியபொழுதும் சிக்கல் இல்லை, இரு மதத்தாரும் ஒற்றுமையாகவே வழிபட்டிருக்கின்றார்கள்
பாபர் மசூதி அருகே சிறிய ராமர் கோவில் இருந்திருக்கின்றது ஆனால் மத ஒற்றுமை அப்படி இருந்திருக்கின்றது
வெள்ளையன் காலத்து ஆவணமும் அதை சொல்கின்றது , அயோத்திக்கு ஒரு சுல்தான் இருந்தாலும் அந்த அயோத்தி அமைதியாகவே இருந்திருக்கின்றத்
எல்லாம் வெள்ளையன் திப்புசுல்தானை வீழ்த்தும் வரை
மதரீதியாக இங்கு பிரித்து ஆளலாம் என வெள்ளையன் அப்பொழுது கற்றபாடம் அயோத்தில் பொறியாய் விழுந்தது ஜின்னா இந்துமகா சபையில் நெருப்பாய் விழுந்தது
தேசம் எரிந்து உடைந்தது , அயோத்தி எரிய தொடங்கியது அது என்னென்ன விளைவுகளையோ கொடுத்துவிட்டது
இன்னும் நிலமை சரியாகவில்லை சரியாக விடவும் மாட்டார்கள் சண்டாளர்கள்
ஆனால் தமிழகத்தை பாருங்கள்
இந்த பூமி ஒற்றுமைக்கு வழிகாட்டுகின்றது, நாகூரும் வேளாங்கண்ணியும் இஸ்லாமியக்கும் கிறிஸ்தவருக்கு மட்டும் அல்ல
இந்த அழகர் விழா இந்துக்களுக்கு மட்டும் அல்ல
எல்லாமும் எல்லோருக்கும் என மிக சகோதரத்துவடன் வாழும் பூமி இது. இந்துக்கள் மகிழ்ச்சியில் இஸ்லாமியரும் இஸ்லாமியர் மகிழ்ச்சியில் இந்துக்களும் பங்குபெறும் அற்புத பூமி
திருச்சி திருவரங்கம் ஆலயத்திலும் இன்னும் பல ஆலயங்களிலும் இந்த ஒற்றுமையினை காணலாம்
இந்த ஒற்றுமை செழிக்கட்டும், மானிடம் மத ஒற்றுமையால் வளரட்டும்
இந்த ஒற்றுமையினையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் ஒழித்து அயோத்தி போல இங்கும் ஏதும் செய்து குளிர்காயலாம் என யாரும் வருவாராயீன் அவர்களை தூக்கி அழகர் குதிரை காலில் போட்டு போட்டு மிதித்து எறிய வேண்டும்
இந்தியா முழுக்க ஒருவித பதற்றம் நிலவும் நேரத்தில் மொத்த இந்தியாவுக்கும் ஒளியும் வழியும் காட்டும் மதுரை வாழ்க
அழகர் அடிக்கடி வரட்டும், ஒற்றுமை ஓங்கட்டும்
இது மதங்கள் வாழும் பூமியே தவிர மதம் பிடித்தாடும் பூமி அல்ல என உரக்க சொல்லும் மதுரை மக்களுக்கு வாழ்த்துக்கள்
அன்பும் சகோதரத்துவமும் செழிக்கட்டும், அந்த மகிழ்ச்சியில் மக்கள் மகிழ அதனை பார்க்க அடிக்கடி மதுரைக்கு அழகர் வரட்டும்
