மதுரை விமான நிலையத்தில் 10 கிலோ யுரேனியத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்…

  • மதுரை விமான நிலையத்தில் ரூ.25.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ யுரேனியத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

இது மிக மிக சீரியசான பிரச்சினை

அந்த நபர் பெயர் முசோபர் கனி, இலங்கையிலிருந்து வந்திருக்கின்றார். அது இஸ்லாமிய பெயர் என்பதற்காக சொல்லவில்லை , இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடமாடுவது ஒன்றும் ரகசியமல்ல‌

இது எவ்வகை யுரேனியம், செறிவூட்டபட்டதா இல்லையா? இவர் கடத்தியதன் நோக்கம் என்ன? யாருக்கு கொடுக்க இருந்தார் என்பதெல்லாம் விடை கண்டே ஆகவேண்டிய கேள்விகள்

யுரேனியம் கிடைத்தவுடன் அணுகுண்டு செய்ய முடியாது, அப்படி சாத்தியம் இருந்தால் பின்லேடன், ஐஎஸ் இயக்கம் எல்லாம் என்றோ செய்திருக்கும்

ஆனால் செறிவூட்டபட்ட யுரேனியமாக இருந்தால் கொஞ்சம் சீரியசான பிரச்சினை.

இது கடத்தலா? இல்லை வேறு கதிரியக்க பொருளை கடத்தும் முன்னோடி திட்டமா என்பதுதான் பெரும் புதிர்

ஊடகங்கள் மெர்சலை விட்டுவிட்டு மிக தீவிரமாக கிளறவேண்டிய விஷயம் இது.

ஆனால் காமெடியான விஷயங்களை சீரியசாகவும், மகா சீரியசான விஷயங்களை காமெடியாகவும் பார்க்கும் தமிழகத்தில் இவ்விஷயம் சாதாரணமாய் பார்க்கபடுவதுதான் பரிதாபம்