மத்திய அரசுக்கு நேரம் சரியில்லை

மத்திய அரசுக்கு நேரம் சரியில்லை என்பது அமைச்சர்கள் பேசிய பேச்சுக்களிலும் இன்னும் பல விவகாரங்களிலும் தெரிகின்றது

அதெல்லாம் விட மிகபெரும் விவகாரம் வெடிக்க இருக்கின்றது, இது நிச்சயம் அவர்களுக்கு சாதகமாக இருக்காது, பெரும் அலை வீசலாம், பாஜக அரசு இதை தாண்டி வருவது கடினமே

விஷயம் நீர்மூழ்கி கப்பல் விவகாரத்தில் வெடிக்கின்றது, அதாவது இந்திய கப்பல்படைக்கு 9 நீர்மூழ்கி கப்பல் கட்டவேண்டும்

இவை சாதாரண தாக்குதல் ரகம் என்பதால் சில தொழில்நுட்பங்களை வெளிநாடுகளிடம் பெற்றாலே போதும் நாமே கட்டிவிடலாம்

இந்தியாவில் இதற்கு அதாவது நீர்மூழ்கி கப்பல் கட்ட விண்ணபித்த நிறுவணங்கள் 3

முதலாவது எல் & டி எனும் பரகாசுர கம்பெனி இரண்டாவது மத்திய அரசின் மரைன் கழகம் மூன்றவாது அம்பானியின் நேவல் கம்பெனி

இதில் அம்பானியினை நாம் குறை சொல்லமுடியாது காரணம் ஏற்கனவே கப்பல் கட்டிய கம்பெனி ஒன்றை ரிலையன்ஸ் குழுமம் வாங்கி சில வருடங்களாக கட்டுகின்றது, கொஞ்சம் அனுபவம் உள்ள கம்பெனி

இந்த மூன்று கம்பெனிகளில் ஒன்றுக்குத்தான் கப்பல் கட்ட அனுமதி கிடைக்கும் எனும் நேரத்தில் 4ம் கம்பெனி உள்ளே வருவதுதான் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு சிக்கல்

ஆம் அது அதானியின் கம்பெனி, அவருக்கான கப்பல் கட்டும் அனுபவம் உதயநிதியின் அரசியல் அனுபவத்தை விட பன்மடங்கு குறைவு, அதாவது சுத்தமாக இல்லை

அதானிக்கு கப்பல் உண்டு, துறைமுகங்கள் உண்டு எல்லாமே ஏற்றல் இறக்கல் மாறாக நீர்மூழ்கி கப்பல் எல்லாம் தெரியாது

பின் எப்படி கப்பல் கட்டுவீர்கள் என கேட்டால் அதானி குழுமம் அசால்ட்டாக சொல்கின்றது, எங்களுக்கு அனுமதி இல்லாவிட்டால் என்ன பொதுதுறை நிறுவணங்களோடு சேர்ந்து செய்வோம்

இவர்கள் குறிவைப்பது இந்துஸ்தான் ஷிப்பிங்க் லிமிட்டெட் எனப்படும் எச்.எஸ்.எல்

இந்த கப்பல் பட்ஜெட்டின் விலை அதிகமில்லை அதாவது 45 ஆயிரம் கோடி மட்டுமே

கவனியுங்கள், அதானியிடம் கப்பல் கட்டும் அனுபவம் கிடையாது வசதி கிடையாது, அதற்கான துறைமுகமோ வசதியோ கிடையாது

ஆனால் மத்திய அரசின் நிறுவணத்தை சப்கான்டிராக்ட் எடுக்கும் அளவு அது துணிந்து நிற்கின்றது என்றால் அரசில் அதன் கரங்கள் அப்படி ஊடுருவியிருக்கின்றன‌

நமக்கெல்லாம் இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம்

அதானிக்கு கப்பல் வேலையினை கொடுத்து அதை இந்த எச்.சி.எல் எனப்படும் அரசு நிறுவணம் செய்வதற்குபதில் நேரடியாக அதை எச்.எஸ்.எல்லுக்கே கொடுத்தால் என்ன?

அதுதான் சரி அதுதான் தர்மம், நாட்டுக்கு அவசியம்

இந்த விவகாரம் வெடிகுண்டாய் வெடிக்கலாம், காங்கிரஸ் இதை கையில் எடுக்கும் என்கின்றார்கள், சுதாரிக்கும் அரசு ராபர்ட் வதேரா எனும் பிரியங்கா கணவனின் மேலான சங்கிலிகளை தளர்த்தி அவனை வெளிநாட்டுக்கு போகலாம் என்கின்றது

எதற்கோ அஞ்சுகின்றது மத்திய அரசு

இந்திரா காலத்தில் அவரின் ஆட்டத்தை அடக்க கலைஞர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், முரார்ஜி தேசாய் என ஏகபட்ட தலைவர்கள் ஒன்றாய் இணைந்தார்கள்

இப்பொழுது அப்படி அல்ல, பாஜகவுக்கு எதிரி காங்கிரஸ் மட்டுமே அவர்களை அடக்கும் வித்தை பாஜகவுக்கு தெரியும் போல‌

திமுக என்பது மாறிவிட்டது, இதை கையில் எடுத்து அரசியல் செய்ய முக ஸ்டாலினுக்கு தெரியாது அல்லது வராது

லாலு, சந்திரபாபு நாயுடு, கம்யூனிஸ்ட் என யாரும் களத்தில் இல்லை

ஆனால் வலுத்த ஆதாரங்களோடு அதாவது 45 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அதானி வந்து நாக்கை சுழற்றி நிற்கும்பொழுது பெரும் புகைச்சல் வருகின்றது

இருந்து பாருங்கள், இப்பொழுதான் புகைகின்றது இனி வெடிக்கும்

இரண்டாம் சுற்று பாஜக ஆட்சி அவ்வளவு சுமூகமாக நடக்காது போலத்தான் தெரிகின்றது

எனினும் இன்னும் டென்டர் அதானிக்கு ஒதுக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது

இப்பொழுதே அதானியினை தள்ளி வைத்தால் பிழைப்பார்கள் இல்லாவிட்டால் அந்த கோஷத்துக்கு வாய்ப்பளிப்பார்கள்

என்ன கோஷம் “குஜராத்தியன் பிரதமர் , அவரை பிடித்து பல்லாயிரம் கோடியினை தகுதி இல்லாமல் பெரும் தொழிலதிபர் குஜராத்தி

இதை ஏனென்று கேட்டால் நம்மை பிடித்து உள்ளே போடும் அமித்ஷா ஒரு குஜராத்தி

இது இந்தியவா இல்லை குஜராத்திகளின் சாம்ராஜ்யமா?” என்றெல்லாம் கிளம்புவார்கள்

அதை தவிர்ப்பது பாஜகவின் கரங்களிலேதான் இருக்கின்றது

சரி, இந்தியாவில் கசியா விஷயம் வெளிநாட்டு பத்திரிகைகளில் சரியாக வருவதேன்?

45 ஆயிரம் கோடி திட்டம் இது, எவ்வளவு போட்டி இருக்கும்? எவ்வளவு சண்டை இருக்கும்

பாதிக்கபட்டவன் போகிற போக்கில் செய்தியினை தட்டிவிட்டு செல்லாமலா இருப்பான்?