மந்தகாச புன்னகை வீசுகின்றது சாமி
நித்திசாமி தன் கைலாச நாட்டை அங்கீகரிக்கும்படி ஐ.நா சபையின் கதவுகளை தட்டிகொண்டிருக்கின்றார், என்னதான் அவரின் சீட கோடிகள் ஞானத்தின் எல்லையினை தொட்டாலும் ஐ.நா அனுமதிக்க சட்டபுத்தகங்களை திரட்டுகின்றன
சாமி தன் மனுவில் தாம் உலகெல்லாம் இருக்கும் அனாதை, ஆதரவற்ற, ஞானமற்ற இந்துக்களுக்கு நாடு அமைத்து அடைக்கலம் கொடுத்து வாழவைக்க போவதாக சொல்லியிருகின்றார்
இந்தியா தன்னை கொல்ல பார்ப்பதாகவும் தன்னை கூட்டுகொலை செய்யதிட்டமிட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கும் சாமி இன்னும் பல விஷயங்களையும் சொல்லிவிட்டார்
அவர் நாட்டில் குடியேற விரும்புவோர் அவரின் சீடராகவும் அவரை ஏற்றுகொண்டோராகவும் இருக்கவேண்டுமாம்
தமிழ் மிக கண்டிப்பாக தெரியவேண்டுமாம் சமஸ்கிருதம் தெரிந்தால் நல்லது இல்லை கற்க வேண்டும்
இந்திக்கு இடமே இல்லை காரணம் இது திராவிட சாமி
இப்படி பல விஷயங்களை சொல்லிவிட்டு ஐ.நா வாசலில் காத்துகிடக்கின்றார் சாமி
இனி அனுமதி கிடைத்தவுடன் கரன்ஸி எப்படி அடிப்பது, குடியுரிமை எப்படி வடிவமைப்பது என ஏகபட்ட வேலைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றது சாமியின் சீட கோடி கூட்டம்
ஐ.நாவில் சாமி கொடுத்தமனு இப்பொழுது குப்பைதொட்டிக்கு போயிருக்கலாம் அல்லது இந்திய அரசுக்கே அனுப்பபட்டிருக்கலாம்
இதை எல்லாம் தன் ஞானகண்ணால் பாத்தபடி மந்தகாச புன்னகை வீசுகின்றது சாமி