மனிதனை மனிதன் இழுக்கும் இழிவான கைரிக்சாவினை

மனிதனை மனிதன் இழுக்கும் இழிவான கைரிக்சாவினை ஒழித்தது கருணாநிதி : உபிக்கள் கோஷம்

(முதுமை காரணமாக தளர்ந்திருந்த கருணாநிதி அவர்களுக்கு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யபட்டிருந்தது, அதனை தள்ளிசென்றவர்களுக்கு அரசு சம்பளம் என்பது குறிப்பிடதக்கது

ஆம் பெரும் குடும்பம் இருந்தும் அந்த உதவியினை சொந்தம் அல்லாதவர்களாக செய்தவர்கள் சம்பளம் பெற்றுத்தான் செய்தார்கள்)

இந்த கை ரிக்சா ஒரு காலத்தில் உலகம் முழுக்க இருந்திருக்கின்றது, பின் வழக்கொழிந்திருகின்றது அங்கெல்லாம் யார் ஒழித்தார்கள் என்பது தெரியவில்லை

இப்பொழுது மாட்டு உழவு அழிந்து டிராக்டர் உழவு வந்தாயிற்று டிராக்டர் புரட்சியினை தொடங்கி வைத்தது யாரெனவும் உபிக்கள் சொல்லவில்லை

நல்ல வேளையாக ஆட்டு உரலில் மாவரைத்த பெண்களுக்கு கிரைண்டர் கொடுத்தது மணியம்மை என சொல்லவில்லை அதுவரைக்கும் நல்லது